முதல்முறையாக கோவிலுக்குள் நுழைந்து சிறிதுநேரம் தங்கி குளத்துக்கு திரும்பிய அனந்த பத்மநாபசுவாமி கோவில் முதலை பபியா..

வன உயிரின நிபுணர்கள் இதைப்பற்றி தெரிவிக்கும்போது, முழுவதுமாக கார்போஹைட்ரேட் உணவைத்தான் முதலை உண்கிறது என்பது விவாதிக்கப்படவேண்டியது. எனினும், அம்முதலை கோவில்  வளாகச் சூழலில் பாதுகாப்புடன் இருப்பது பாராட்டத்தக்கது என்று தெரிவிக்கிறார்கள்.

முதல்முறையாக கோவிலுக்குள் நுழைந்து சிறிதுநேரம் தங்கி குளத்துக்கு திரும்பிய அனந்த பத்மநாபசுவாமி கோவில் முதலை பபியா..
அனந்த பத்மநாபசுவாமி கோவில் முதலை பபியா
  • Share this:
கேரள மாநிலம், காசர்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ள அனந்தபுரா என்னும் கிராமத்தில் இருக்கும் அனந்த பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் 70 ஆண்டுகளாக வசித்துவரும் பபியா என்னும் முதலை, முதன்முறையாக கோவில் வளாகத்துக்குள் நுழைந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் குளத்துக்கு திரும்பியதாக அனந்த பத்மநாபசுவாமி கோவில் தலைமை பூசாரியான சந்திரபிரகாஷ் நம்பீசன் தெரிவித்துள்ளார்.

பக்தர்களும், கோவில் நிர்வாகமும் முதலைக்கு பபியா என்று பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள் . இந்த முதலை மிகவும் சாதுவாக யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் இருக்கிறது என கூறப்படுகிறது. உச்சிகால பூஜையின் போது வழங்கபடும் வெல்லம் கலந்த சாதத்தை மட்டுமே உண்பதாக ஆலய நிர்வாகத்தால் கூறப்படுகிறது. இதற்கு வழங்கப்படும் உணவை முசலி நெய்வேத்யம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை, அவல், வெல்லம், வாழைப்பழங்கள் கலந்து முதலைக்கு உணவு வழங்கப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்படுகிறது. பக்தர்களும் தங்கள் கையால் உணவை உணவளித்துவந்திருக்கிறார்கள்.கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் அது நெய்வேத்தியத்தை தவிர மீன்களைக் கூட உண்ணுவதில்லை என சொல்கிறார்கள். வன உயிரின நிபுணர்கள் இதைப்பற்றி தெரிவிக்கும்போது, "முழுவதுமாக கார்போஹைட்ரேட் உணவைத்தான் முதலை உண்கிறது என்பது விவாதிக்கப்படவேண்டியது. எனினும், அம்முதலை கோவில்  வளாகச் சூழலில் பாதுகாப்புடன் இருப்பது பாராட்டத்தக்கது" என்று தெரிவிக்கிறார்கள்.

அனந்த பத்மநாபசுவாமி கோவில் முதலை பபியா


மேலும் இதுவரை இந்த முதலையால் மனிதர்களுக்கும், பிற விலங்கினங்களுக்கும் தீங்கு ஏற்படவில்லை என்றும் இக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading