Home /News /national /

கர்நாடகாவில் இரு குழுவினருக்கு இடையே பயங்கர மோதல்: 144 தடை உத்தரவு

கர்நாடகாவில் இரு குழுவினருக்கு இடையே பயங்கர மோதல்: 144 தடை உத்தரவு

காட்சிப் படம்

காட்சிப் படம்

கர்நாடகா மாநிலம் ஷீமெகா மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கர்நாடகா மாநிலம் ஷீமெகா மாவட்டத்தின் ஷீமெகா நகரில் உள்ள அமீர் அகமது வட்டம் அவ்வப்போது மோதல்கள் நடக்கும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஒன்று. வலதுசாரி இந்து  அமைப்பைச் சேர்ந்த தனிப்பட்ட சிலர் , இந்த  நான்கு வழிச்சாலையின் மையப் பகுதியில் இருந்த சாவர்க்கரின் விளம்பரப் படத்தை வைக்க விரும்பினார். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்த சிலர், படத்தை  அப்புறப்படுத்தினர்.

    இதனையடுத்து, கால்வதுறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதற்கிடையே , அப்பகுதியில் கடை  நடத்தி  வந்த  20 வயது நிரம்பிய பிரேம் சிங் என்பவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

     



    இதுகுறித்து, கர்நாடக சட்டம் இழுக்கு ஏடிஜிபி கூறுகையில், " பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு  நடவடிக்கைகளுக்கு 15  காவல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.  நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது" என்று தெரிவித்தார்.         

    நதீம், அப்துல், ஐபி உலா, தன்வீர் ஆகிய நால்வர் மீது  இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 307ன் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதல்கள் நகரப்பகுதி  மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளன.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Karnataka

    அடுத்த செய்தி