Home /News /national /

தூத்துக்குடியில் இருந்து வெளியேற்றப்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் புதிய ஆலை குஜராத்தில் அமைகிறது

தூத்துக்குடியில் இருந்து வெளியேற்றப்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் புதிய ஆலை குஜராத்தில் அமைகிறது

வேதாந்தா

வேதாந்தா

வேதாந்தா நிறுவனம் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்ய தேர்வு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gujarat |
இயற்கை மாசுபாட்டை ஏற்படுத்துவதாக கூறி  தூத்துக்குடியில் இருந்து வெளியேற்றப்பட்ட வேதாந்த நிறுவனம் குஜராத் அரசோடு இணைந்து அகமதாபாத்தில் மின்னணு சாதனங்களுக்கான செமிகண்டக்டர் உருவாக்கும் ஆலையை நிறுவவுள்ளது.

வேதாந்தா லிமிடெட் உலகின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட இயற்கை வள நிறுவனங்களில் ஒன்றாகும். முக்கியமாக துத்தநாகம், ஈயம், வெள்ளி, அலுமினியம், செப்பு, இரும்பு தாது, கண்ணாடி இழை மற்றும் செமிகண்டக்டர்கள் ,எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தியில் ஈடுபடுகிறது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா, நமீபியா, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் இந்நிறுவனம் பரவியுள்ளது. இது லண்டனில் பட்டியலிடப்பட்ட வேதாந்தா ரிசோர்சஸ் பிஎல்சியின் இந்திய துணை நிறுவனமாகும். தனிமங்களை எடுத்து சுத்திகரித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிறுவனம் தற்போது மென்பொருட்கள் மற்றும் அதன் உதிரி பாக தயாரிப்பிலும் ஈடுபட உள்ளது.

மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு மகாராஷ்டிரா, கர்நாடகா,ஒடிசா, கோவா, கேரளா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் என்று நாட்டின் பல பகுதிகளில் தன் கிளைகளைக் கொண்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்த இதன் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரும் போராட்டம் மற்றும் கலவரத்தால் 2018ல் மூடப்பட்டது.

2022ல் அதிக கடன் உள்ள முதல் 10 நாடுகள் எவை தெரியுமா?

செமி கண்டக்டர்
கணினி, அலைபேசி, ஸ்மார்ட் டிவி, கார்கள் என மின்னணு பொருட்கள் இடம்பெறுபவற்றில் செமிகண்டக்டரின் பணி இன்றியமையாதது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் செமிகண்டக்டருக்கு கடந்த ஓராண்டாக கடும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் இதன் விலைகள் கடுமையாக உயர்ந்தன. இந்தியா செமிகண்டக்டரை முற்றிலுமாக இறக்குமதியே செய்கிறது.

இந்நிலையில், மத்திய அரசு ஆத்மநிர்பார் பாரத் என்ற உள்நாட்டு உற்பத்தி திட்டத்தை  அறிமுகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு நிதியாக 76 ஆயிரம் கோடி ரூபாய் செமிகண்டக்டர் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் கீழ் தான் வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. குஜராத் அரசும் இந்த சூழலை பயன்படுத்தி நாட்டிலேயே முதல் மாநிலமாக செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்பிளே தயாரிப்புக்கென பிரத்யேக, மானியங்கள் நிறைந்த கொள்கையை அறிவித்தது. இதனால் வேதாந்தா நிறுவனம் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்ய தேர்வு செய்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:

இதற்காக குஜராத் அரசுடன் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் ஈ.சி.ஈ., எனும் மின்னணு பொறியியல் முடித்தவர்கள் உட்பட 2 லட்சம் இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

இனி இந்த பொருட்களை விற்கக்கூடாது - அமேசானுக்கு உத்தரவிட்ட அரசாங்கம்.!

இது தொடர்பாக வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால், திட்டத்தின் முதல் கட்டத்தில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். செமிகண்டக்டர் உற்பத்தி திறன்களை ஏற்படுத்துவதில் பெரிய நாடுகளிடம் வேகமாக செயல்படுகிறது. இத்துறையில் உற்பத்தியைத் தொடங்கும் நான்காவது நாடாக இந்தியா இருக்கும். இன்னும் 15 நாட்களில் தொழிற்சாலைக்கான நிலத்தை அடையாளம் காண்போம். அடுத்த 2 - 3 மாதங்களில் பூமி பூஜை போட்டு பணியை தொடங்குவோம். 4 முதல் 5 ஆண்டுகளில் போட்ட முதலீட்டை எடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நேரடியாக 1 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 1 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்என்று கூறப்படுகிறது
Published by:Ilakkiya GP
First published:

Tags: Gujarath, Vedanta

அடுத்த செய்தி