ஹோம் /நியூஸ் /இந்தியா /

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்கர் புகைப்படம் திறப்பு - கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எல்.எல்.ஏ-க்கள்!

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்கர் புகைப்படம் திறப்பு - கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எல்.எல்.ஏ-க்கள்!

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கர் புகைப்படம் திறப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கர் புகைப்படம் திறப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் விநாயக் தாமோதர் சாவர்கரின் புகைப்படத்தை அம்மாநில அரசு திறந்து வைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்நிலையில் அம்மாநில சட்டப்பேரவையில் இந்துத்துவா கொள்கையின் முன்னோடியும் விடுதலை போராட்ட வீரருமான விநாயக் தாமோதர் சாவர்கரின் புகைப்படத்தை அம்மாநில அரசு திறந்து வைத்துள்ளது.

பாஜக அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னாள் முதலமைச்சரும், கர்நாடக எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா இந்த நடவடிக்கை குறித்து கூறுகையில், சட்டப்பேரவையில் சாவர்கரின் புகைப்படம் தேவையற்றது. சாவர்கர் ஒரு சர்ச்சைக்குரிய நபர். வேண்டுமென்றால் வால்மீகி, பசவனா, கனக தாஸா, அம்பேத்கர், படேல் போன்றோரின் புகைப்படத்தை பாஜக அரசு திறந்து வைக்கட்டும் என அவர் கூறியுள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறுகையில், காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களில் சாவர்கரும் ஒருவர். அப்படி இருக்க எங்களிடம் ஆலோசனை நடத்தாமலேயே இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. இதுவரை எங்களிடம் ஏதும் ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆம் ஆத்மி இல்லை என்றால் குஜராத்திலும் பாஜகவை தோற்கடித்திருப்போம் - ராகுல் காந்தி கருத்து

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு குறித்து பதில் தெரிவித்துள்ள பிரகலாத் ஜோஷி, "காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக சாவர்கரின் விடுதலை போராட்டம் அவரது தியாகத்தை மட்டம் தட்டி பேசி வருகிறது. ஆனால் இப்போது இருக்கும் காங்கிரஸ்  கட்சியே ஒரு போலி கட்சி என்பதே உண்மை. கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக, சாவர்கரின் விடுதலைப் போராட்டத்தை மறுக்க முடியாது" என்று பதிலடி தந்துள்ளார்.

கர்நாடக-மகாராஷ்டிரா மாநிலங்கள் மத்தியில் நீண்ட காலமாக எல்லை பிரச்சனை இருந்துவரும் நிலையில், இது தற்போது பூதாகரமாக மாறியுள்ளது. கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பெலகாவி, பீதர், கார்வார் ஆகிய மாவட்டங்களில் சுமார் 800க்கும் மேற்பட்ட கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர். இந்த மாவட்டங்களை மகாராஷ்டிராவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. தற்போது இந்த விவகாரம் கொதி நிலையில் உள்ள சூழலில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாவர்கரின் புகைப்படத்தை கர்நாடக மாநில பாஜக அரசு சட்டப்பேரவையில் திறந்து வைத்துள்ளது.

First published:

Tags: BJP, Congress, Karnataka