ஹோம் /நியூஸ் /இந்தியா /

தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆருடன் உணவு அருந்திய விசிக தலைவர் திருமாவளவன்!

தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆருடன் உணவு அருந்திய விசிக தலைவர் திருமாவளவன்!

விசிக தலைவர் திருமாவளவன், தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்

விசிக தலைவர் திருமாவளவன், தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்

2024 தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களை அழைத்து, கேசிஆர் தனது கட்சியின் பெயரை மாற்றியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Hyderabad, India

    தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் பார்த் ராஷ்ட்ரிய சமிதி என்று தனது கட்சியின் பெயரை இன்று மாற்றிய நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    சமீப காலமாக தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் தெலங்கானா முதலமைச்சரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்ட்ரிய சமிதி எனும் தேசிய கட்சியை தொடங்கியுள்ளார்.

    அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக விசிக தலைவர் திருமாவளவன் ஹைதராபாத் சென்றுள்ளார். இன்று காலை தெலங்கானா முதலமைச்சர் மாளிகையில் அவருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    அப்போது தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திருமாவளவனை மற்ற தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பங்கேற்றார்.

    இதையும் வாசிக்க: பஹாரி சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு..! - காஷ்மீரில் அமித் ஷா அறிவிப்பு

    2024 தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களை அழைத்து, கேசிஆர் புதிய கட்சியை தொங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த புதிய கட்சிக்கு டி.ஆர்.எஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கார் சின்னத்தையே ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Kcr, Telangana, Thirumavalavan