உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள மாசுபாடுகள் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி மூன்றாம் இடத்தில் உள்ளது.
உலகளவில் மாசுபாடுகள் மிகுந்த டாப் 15 நகரங்களின் பட்டியலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரம் முதலிடத்தில் உள்ளது. வாரணாசியையும் சேர்த்து டாப் 15 நகரங்களின் பட்டியலில் நான்கு நகரங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவைகள்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்ற தொகுதியான வாரணாசியில்தான் மக்கள் அலர்ஜி மற்றும் சுவாசப் பிரச்னைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
அதேபோல், இப்பட்டியிலில் டெல்லி 6-வது இடம் பிடித்துள்ளது. டெல்லியை அழகுப்படுத்துவதிலும் உள்கட்டமைப்புப் பணிகளில் மட்டுமே அரசு கவனம் செலுத்துவதாகவும் காற்று மாசுபாடு குறித்து எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்றும் ‘க்ளைமேட் ட்ரெண்ட்ஸ்’ என்னும் சுற்றுச்சூழல் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் பார்க்க:
மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தடை!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.