ஹோம் /நியூஸ் /இந்தியா /

2023-ம் ஆண்டில் உள்நாட்டு நீர்வழி கப்பல் சேவை : இந்தியாவில் எங்கு தொடங்குகிறது தெரியுமா?

2023-ம் ஆண்டில் உள்நாட்டு நீர்வழி கப்பல் சேவை : இந்தியாவில் எங்கு தொடங்குகிறது தெரியுமா?

உத்தரபிரதேசம் டூ அசாம் உள்நாட்டு நீர்வழி கப்பல் சேவை

உத்தரபிரதேசம் டூ அசாம் உள்நாட்டு நீர்வழி கப்பல் சேவை

இந்த சேவையானது, கங்கை-இந்தோ பங்களாதேஷ் புரோட்டோகால் பாதை (IBPR) மற்றும் பிரம்மபுத்திரா வழியாக 4,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்க உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் அசாமின் போகிபீல் இடையே நாட்டின் மிக நீளமான நதி-கப்பல் சேவை 2023 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அறிவித்துள்ளார்.

உள்நாட்டு நீர்வழி பாதைகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் பனி சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது. சுற்றுலா மட்டும் இன்றி வணிக ரீதியாகவும் பயன்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உத்திரபிரதேசம் முதல் அசாம் வரை உள்நாட்டு நீர்வழிகள் வழியாக கப்பல் சேவையை உருவாக்க உள்ளனர்.

கங்கை நதி, உத்திரகாண்ட பகுதியில் தொடங்கி உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், வங்காளம் வழியாக பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. பிரமபுத்திரை நதி திபெத் பகுதியில் உதித்து, நேபாளம், அருணாச்சலம், அசாம் வங்காள தேசம் வழியாக வந்து கங்கையுடன் சேர்ந்து கடலில் கலக்கிறது. இந்த வழி பாதையை தான் கப்பல் சேவையை செயல்படுத்த உள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்..! இந்திய- பூட்டான் எல்லை கதவுகள் மீண்டும் திறப்பு.. களைகட்ட இருக்கும் சுற்றுலாதலங்கள்!

இந்த சேவையானது, கங்கை-இந்தோ பங்களாதேஷ் புரோட்டோகால் பாதை (IBPR) மற்றும் பிரம்மபுத்திரா வழியாக 4,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்க உள்ளது. இது சுற்றுலா மற்றும் சரக்கு போக்குவரத்தில் வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நீர்வழிகளை பயன்படுத்த அஸ்ஸாம் மக்களுக்கு வாய்ப்பளிக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

"உள்நாட்டு வழிசெலுத்தல், நதி கப்பல் சுற்றுலா மற்றும் பிரம்மபுத்திரா முழுவதும் பொருத்தமான முனையங்களை நிர்மாணிப்பதற்கான வழிகளை எங்கள் அரசாங்கம் கண்டறிந்து வருகிறது" என்று மத்திய கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறினார்.

திங்களன்று, அமைச்சர்சர்பானந்தா  அசாமில் திப்ருகர் அருகே போகிபீல் பகுதியின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில், போகிபீல் மற்றும் குய்ஜான் ஆகிய இடங்களில் இரண்டு மிதக்கும் ஜெட்டிகளை அமைப்பதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கோவை மக்களே ஒரு நற்செய்தி... இந்த புரட்டாசிக்கு திருப்பதி போக IRCTC இன் அற்புதமான பேக்கேஜ்!

அப்போது பேசிய அவர், ’வடகிழக்கு மாநிலத்தில் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள போகிபீல் மற்றும் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள குய்ஜான் ஆகிய இரண்டு மிதக்கும் ஜெட்டிகள், அதிநவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிநவீன முனையங்களாகக் கட்டப்படும்.

பொறியியல், கொள்முதல், கட்டுமானம் (EPC) ஒப்பந்த முறையில் கோஸ்டல் கன்சோலிடேட்டட் ஸ்ட்ரக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஜெட்டிகளும் ₹ 8.25 கோடி செலவில் கட்டப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Assam, Travel, Uttar pradesh