ஹோம் /நியூஸ் /இந்தியா /

வந்தே பாரத்... தொடரும் விபத்து : ஒரே மாதத்திலேயே 3வது முறையாக மாடு மோதி விபத்துகுள்ளான ரயில்!

வந்தே பாரத்... தொடரும் விபத்து : ஒரே மாதத்திலேயே 3வது முறையாக மாடு மோதி விபத்துகுள்ளான ரயில்!

வந்தே பாரத் ரயில் விபத்து

வந்தே பாரத் ரயில் விபத்து

இந்த விபத்து சம்பவத்தால் ரயில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் ஒரே மாதத்திலேயே மூன்றாவது முறையாக மாடு மோதி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கடந்த 30 ஆம் தேதி பிரதமர் மோடி இந்தியாவின் மூன்றாவது அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலின் சேவையை தொடங்கி வைத்தார். மும்பை முதல் குஜராத்தின் காந்திநகர் வரை செல்லும் இந்த ரயில் முதல் நாள் செல்லும்போதே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த எருமை மாடுகள் மேல் முட்டி விபத்துக்குள்ளானது.

  விபத்தில், ரயிலின் என்ஜின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. அதை மட்டும் தற்காலிகமாக சரி செய்து ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. மேலும், விபத்தை ஏற்படுத்திய மாடுகளின் உரிமையாளர்கள் மீது மேற்கு ரயில்வே வழக்கு பதிவு செய்தது.

  பின்னர் மும்பை சென்ட்ரலில் உள்ள ரயில் பெட்டி பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் தளத்திற்கு கொண்டுவரப்பட்டு இரவு முழுவதும் பழுது நீக்கப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் மறுநாள் இயக்கப்பட்டது.

  இதையும் படிங்க: சமூக ஊடகங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும்- அரசு உத்தரவு!

  அப்போது குஜராத்தின் கஞ்சாரி மற்றும் ஆனந்த் நிலையங்களுக்கு இடையில் பசு மாடு மோதி ரயில் மீண்டும் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து வந்தே பாரத் ரயில் வைத்து நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வந்தனர்.

  இந்த நிலையில் இன்று காலை 8.17 மணியளவில் மும்பை சென்ட்ரல் பிரிவில் அதுல் அருகே வந்தே பாரத் ரயிலை கடந்து சென்றபோது கால்நடை மீது மோதி விபத்துக்குள்ளானது. மும்பை சென்ட்ரலில் இருந்து காந்திநகருக்கு ரயில் சென்று கொண்டிருந்தது நடந்த சம்பவத்தால் ரயில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: PM Modi, Vande Bharat