ஹோம் /நியூஸ் /இந்தியா /

52 நொடிகளில் 100 கி.மீ. வேகம் - ஜப்பானின் புல்லட் ரயில் வேகத்தை முறியடித்த வந்தே பாரத் ரயில்.!

52 நொடிகளில் 100 கி.மீ. வேகம் - ஜப்பானின் புல்லட் ரயில் வேகத்தை முறியடித்த வந்தே பாரத் ரயில்.!

வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்

Vande Bharat Express | என்ஜின் தொழில்நுட்பம் உள்பட முற்றிலும் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில்களானது புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மக்களின் பொன்னான நேரத்தை சேமிக்கும் வகையில், அதிவேக போக்குவரத்து வசதியை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை இல்லாத அதிகபட்ச வேகத்தில் இயங்கக் கூடிய வந்தே பாரத் ரயில்களின் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு, விரைவில் பயணிகளுக்கான சேவை தொடங்கப்பட உள்ளது.

என்ஜின் தொழில்நுட்பம் உள்பட முற்றிலும் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில்களானது புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளது. அதாவது, ஜப்பான் நாட்டின் அதிவேக ரயிலான புல்லட் ரயிலின் தொடக்கநிலை வேகத்தை இது முறியடித்துள்ளது.

இதுகுறித்து, குளோபல் ஃபின்டெக் என்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், “வந்தே பாரத் ரயிலானது 52 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டியுள்ளது. ஆனால், ஜப்பானின் புல்லட் ரயில் இதே வேகத்தை எட்டுவதற்கு 55 நொடிகளை எடுத்துக் கொள்கிறது’’ என்று தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வீடியோவை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்து கொண்டார். சுமார் ஒரு நிமிடம் ஓடக் கூடிய அந்த வீடியோவில், வந்தே பாரத் ரயில் உள்ளே ஒரு கிளாஸ் நிறைய தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ரயிலின் வேகத்தை காண்பிக்கும் செல்லுலார் டிவைஸ் ஒன்றும் அதனுடன் இருந்தது.

Also Read : அதிர்ச்சி தரும் ஐடி வேலை மோசடிகள்.. வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு அரசு எச்சரிக்கை!

ரயிலானது மணிக்கு 180 கி.மீ. முதல் 183 கி.மீ. வேகத்தில் பயணித்தபோதும் கூட அந்த கிளாஸில் இருந்து தண்ணீர் சிந்தவில்லை. அந்த அளவிற்கு ரயில் அதிர்வின்றி பயணம் செய்து கொண்டிருந்தது. இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “ரயில் 180 கி.மீ. வேகத்தில் சென்றபோதும் கூட ஒரு சொட்டு நீர் கூட கீழே சிந்தவில்லை’’ என்று தெரிவித்தார்.

அமைச்சர் பகிர்ந்து கொண்ட இந்த வீடியோவை, பேடிஎம் நிறுவனர் விஜய் சேகரும் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “முற்றிலும் இந்திய தயாரிப்பில் உருவான வந்தே பாரத் ரயிலானது, புல்லட் ரயில் போல 0 முதல் 100 கி.மீ. வேகத்தை துரிதமாக எட்டியுள்ளது. இந்தியராக நாம் இதுகுறித்து பெருமைப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read : உபியில் ஆசிரியரை 3 முறை துப்பாக்கியால் சுட்ட 10 ஆம் வகுப்பு மாணவர் - அதிர்ச்சி வீடியோ

வந்தே பாரத் ரயிலானது ரயில் 18 என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறது. கோடா - நாக்டா ரயில்வே பிரிவில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ. வேகத்தை எட்டியது. தானியங்கி கதவுகள், ஏசி வசதியுள்ள பெட்டிகள், 180 டிகிரிக்கு சுற்றக் கூடிய சேர் போன்ற வசதிகள் இதில் உள்ளன.

Published by:Selvi M
First published:

Tags: Bullet Train, India, Vande Bharat