ஹோம் /நியூஸ் /இந்தியா /

விமானங்களைக் காட்டிலும் மக்கள் இனி வந்தே பாரத் ரயிலை தேர்வு செய்வார்கள் - பிரதமர் நரேந்திர மோடி

விமானங்களைக் காட்டிலும் மக்கள் இனி வந்தே பாரத் ரயிலை தேர்வு செய்வார்கள் - பிரதமர் நரேந்திர மோடி

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரான, மணிக்கு 200 கி.மீ. வேகம் வரையிலும் பயணிக்கக் கூடிய வந்தே பாரத் ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. குஜராத் மாநிலம், காந்திநகரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரையிலான வந்தே பாரத் ரயில் சேவை வெள்ளிக்கிழமை

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரான, மணிக்கு 200 கி.மீ. வேகம் வரையிலும் பயணிக்கக் கூடிய வந்தே பாரத் ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. குஜராத் மாநிலம், காந்திநகரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரையிலான வந்தே பாரத் ரயில் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, அதே ரயிலில் அஹமதாபாதில் உள்ள கலுப்பூர் ரயில் நிலையம் வரையிலும் அவர் பயணம் செய்தார். இனி விமானங்களைக் காட்டிலும் மக்கள் வந்தே பாரத் ரயில் சேவையை தேர்வு செய்யக் கூடும் என்றார் அவர்.

  இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “ஒரு விமானத்தின் உள்ளே கேட்கும் ஒலியைக் காட்டிலும் 100 மடங்கு குறைவான ஒலிதான் வந்தே பாரத் ரயில் உள்ளே கேட்கும். வந்தே பாரத் ரயில் அனுபவத்தை பெற்றுவிட்டால், மக்கள் அதற்குப் பிறகு விமான சேவையைக் காட்டிலும் ரயில் சேவையைத் தான் விரும்புவார்கள்’’ என்று தெரிவித்தார்.

  மேலும், “அஹமதாபாத் மற்றும் மும்பை என இரண்டு மாநகரங்களுக்கு இடையிலான பயணத்தை எளிமையாக்குவதாக வந்தே பாரத் ரயில் அமையும். இரு இடங்களுக்கான தொலைவும் குறைகிறது. நகர்ப்புற போக்குவரத்து தொடர்புகளைப் பொருத்தவரையில் 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு இன்று மிக சிறப்பான நாளாகும்.

  ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகன அதிவேக ஊக்குவித்தல் மற்றும் உற்பத்தி (ஃபேம்) கொள்கையின்படி இந்தியாவில் 7,000 எலெக்ட்ரிக் பேருந்துகளை உற்பத்தி செய்ய ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

  இந்தத் திட்டத்தின் கீழ், மாநகரங்களில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் சாமானியர்களுக்கு புகை தள்ளும் டீசல் பேருந்துகளில் இருந்து விடுதலை அளிக்கும் வகையில் எலெக்ட்ரிக் பேருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் நகரங்களில் இந்த நூற்றாண்டில் புதிய அத்தியாயம் ஏற்பட இருக்கிறது’’ என்றார் மோடி.

  தேவைகளுக்கு ஏற்ப நவீனத்தும் தேவை

  மாறி வரும் சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, நமது மாநகரங்களை நவீனப்படுத்த வேண்டியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மாநகரில் போக்குவரத்து என்பது நவீனமாக இருக்க வேண்டும். தடையற்ற போக்குவரத்து தொடர்பு இருக்க வேண்டும். ஒரு போக்குவரத்து சேவை மற்றொரு போக்குவரத்து சேவைக்கு உறுதுணையாக அமைய வேண்டும்.

  இன்றைய இந்தியா வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. வேகமான வளர்ச்சிக்கு உத்தரவாதம் கொடுக்கிறது’’ என்று மோடி தெரிவித்தார்.

  3ஆவது வந்தே பாரத் ரயில் சேவை

  காந்திநகர் - மும்பை இடையிலான வந்தே பாரத் ரயிலானது 3ஆவது சேவையாகும். ஞாயிறு தவிர்த்து, வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும். முன்னதாக, முதலாவது வந்தே பாரத் ரயில் சேவை டெல்லி - வாரணாசி இடையிலும், டெல்லி - மாதா வைஷ்ணவ தேவி கோவில் வரையிலும் இயங்கி வருகிறது.

  Read More: அனைவருக்கும் இணைய சேவை என்பதே அரசின் நோக்கம்... 5 ஜி சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

  வந்தே பாரத் ரயிலில் தானியங்கி தீ விபத்து சென்சார், சிசிடிவி கேமரா, சாய்வு இருக்கைகள், வைஃபை, ஜிபிஎஸ், குளுகுளு ஏசி வசதி உள்ளிட்டவை பயணிகளுக்கு கிடைக்கிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Indian Railways, PM Modi, Train