நாடெங்கிலும் ரயில் தொடர்புகளை மேம்படுத்தும் நடவடிக்கையை இந்தியன் ரயில்வே மற்றும் மத்திய அரசு இணைந்து செய்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் அதிவேக வந்தே பாரத் விரைவு ரயில்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படுகின்றன. தற்போதைய சூழலில், நாட்டின் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில், இன்னும் கூடுதலான வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது. இந்தப் புதிய ரயில்கள் அனைத்தும் தென் மாநிலங்களில் உள்ள தடங்களில் சேவையை தொடங்க உள்ளன.
முன்னதாக, செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களை இது கடந்து செல்கிறது. இதற்கு முன்னதாக சென்னை - பெங்களூரு - மைசூரு இடையிலான வந்தே பாரத் ரயில்வே தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.
75 வந்தே பாரத் ரயில்கள்
2023ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை 75ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இதே ரயில் சேவையின் எண்ணிக்கையை 400ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வகையில் புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்குவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் வழித்தடங்கள்
தற்போது நாடெங்கிலும் 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. டெல்லி - வாரணாசி, புது டேல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில், காந்திநகர் மற்றும் மும்பை, டெல்லி மற்றும் ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள ஆம்ப் ஆண்டௌரா, சென்னை - மைசூரு, நாக்பூர் - பிளாஸ்பூர், ஹவுரா - புதிய ஜைபாய்குரி, செகந்திராபாத் - விசாகப்பட்டினம் ஆகிய தடங்களில் ஏற்கனவே வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது.
Also Read : செஃல்பி ஆசை.. பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு.. இறங்க வழியின்றி 159 கி.மீ பயணம்!
வந்தே பாரத் சிறப்பம்சங்கள்
பெரிய மாநகரங்கள் இடையே ரயில்வே துறை சார்பில் இயக்கப்படும் இண்டர்சிட்டி அதிவேக ரயில் வந்தே பாரத் ஆகும். இது தொடங்கிய 52 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டக் கூடியது ஆகும். அதேபோல படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களின் வேகம் 220 கி.மீ. என்ற அளவில் உள்ளது. ரயில் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு, ரயில்களின் மோதல் தவிர்ப்புக்கான தொழில்நுட்ப வசதி வந்தே பாரத் ரயில்களில் இடம்பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India, Tamil News, Vande Bharat