முகப்பு /செய்தி /இந்தியா / பாஜக மத்திய தேர்தல் குழு உறுப்பினராக வானதி சீனிவாசன் நியமனம்

பாஜக மத்திய தேர்தல் குழு உறுப்பினராக வானதி சீனிவாசன் நியமனம்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

நிதின் கட்கரி கட்சியின் தேசிய தலைவராகவும் இருந்தவர். வழக்கமாக முன்னாள் தலைவர்கள் அனைவரும் ஆட்சிமன்றக் குழுவில் இடம் பெறுவர். இந்நிலையில், கட்கரி புறக்கணிக்கப்பட்டது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாஜகவில் அதிகபட்ச அதிகாரத்தை கொண்ட அமைப்பாக ஆட்சிமன்றக் குழு திகழ்கிறது. கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களை தேர்வுசெய்வது, கட்சி அளவிலான முக்கிய முடிவுகளை எடுப்பது என அனைத்திற்கும் பொறுப்பு வகிக்கிறது.

இந்நிலையில், பாஜகவின் ஆட்சிமன்றக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆகியோர் குழுவில் நீடிக்கின்றனர். இவர்களை தவிர  பி.எஸ்.எடியூரப்பா, சர்பானந்தா சோனோவால், கே லட்சுமண், இக்பால் சிங் லால்புரா, சுதா யாதவ் மற்றும் சத்யநாராயண் ஜாதியா ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் மத்திய பிரதேச முதலமைச்ர் சிவ்ராஜ் சிங் சவுகானும் நீக்கப்பட்டுள்ளனர்.

Read also : பாஜக ஆட்சி மன்ற குழுவில் மாற்றம்.. மூத்த அமைச்சர் இடம் பெறவில்லை..

மோடி அரசில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக அறியப்படும் நிதின் கட்கரி, கட்சியின் தேசிய தலைவராகவும் இருந்தவர். வழக்கமாக முன்னாள் தலைவர்கள் அனைவரும் ஆட்சிமன்றக் குழுவில் இடம் பெறுவர். இந்நிலையில், கட்கரி புறக்கணிக்கப்பட்டது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வை மாபெரும் வெற்றிபெறச் செய்த முதலமைச்சர் யோகி ஆதித்திய நாத்துக்கும் ஆட்சிமன்றக் குழுவில் இடம் அளிக்கப்படவில்லை.

75 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் எந்த பொறுப்பிலும் இருக்க கூடாது என கூறி வரும் பாஜக, 77 வயதான எடியூரப்பாவை ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமித்துள்ளது. உட்கட்சி பூசல், ஊழல் குற்றச்சாட்டு ஆகிய காரணங்களால் முதலமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட எடியூரப்பாவை சமாதானம் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கையை கட்சி மேலிடம் எடுத்துள்ளதாக தெரிகிறது. கர்நாடகாவில் அடுத்து ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பாவின் லிங்காயத் சமூகம் கர்நாடகாவில் 18 சதவிதிக வாக்குகளை கொண்டுள்ளது.

ஆட்சிமன்றக் குழுவைப் போலவே, பாஜகவின் மத்திய தேர்தல் குழுவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜே.பி. நட்டா தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா தமிழ் நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

First published:

Tags: BJP, Vanathi srinivasan