• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கோவாவில் ஆட்சி கோரும் காங்கிரஸ்... ட்ரெண்டிங்கில் #VampireCongress

கோவாவில் ஆட்சி கோரும் காங்கிரஸ்... ட்ரெண்டிங்கில் #VampireCongress

காங்கிரஸ்

காங்கிரஸ்

காவலன் என்ற அடைமொழியுடன் கூடிய பல ஆயிரக்கணக்கான ட்விட்டர் அக்கவுண்ட்களில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிரான #VampireCongress ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கோவாவில் ஆட்சி கோரும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து ட்விட்டரில் #VampireCongress என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று மாலை, கணைய புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி கூட செய்யப்படாத நிலையில், கோவாவில் காங்., கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரியதை கண்டித்து ட்விட்டரில் #VampireCongress என்ற ஹேஷ்டேக் பாஜகவினரால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது. (Vampire என்றால் ரத்தக் காட்டேரி என்பது பொருள். )

    பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார முன்னெடுப்பாக ட்விட்டரில் பாஜகவினர் பலரும் தங்கள் பெயருக்கு முன்னர் (Chowkidar) காவலன் என்ற அடைமொழியை வைத்து வருகின்றனர்.

    காவலன் என்ற அந்த அடைமொழியுடன் கூடிய பல ஆயிரக்கணக்கான ட்விட்டர் அக்கவுண்ட்களில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிரான #VampireCongress ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

    Goa Pradesh Congress Committee Letter Pad


    கோவா மாநிலத்தின் முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி கூட இன்னமும் செய்யாத நிலையில், அதற்குள் கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரும் காங்கிரஸ் கட்சியின் அதிகார வெறி கண்டிக்கத்தக்கது என பலரும் அந்த ஹேஷ்டேகில் பதிவிட்டு வருகின்றனர்.

    Also See..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Mari S
    First published: