Home /News /national /

கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!

கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!

Vaishno Devi Stampede: காஷ்மீரின் வைஷ்ணோ தேவி கோவில் நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் திரிகூட மலையில் உள்ள புகழ்பெற்ற மாதா வைஷ்ணோ தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அந்தவகையில் புத்தாண்டு தினமான இன்று வழிபடுவதற்காக அதிகளவில் பக்தர்கள் கூட்டம் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

    தொடர்ந்து, காயமடைந்தவர்கள் நாராயணா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், டெல்லி, அரியானா, பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இதையும் படிங்க : பாஜகவில் இணைந்த கிரிக்கெட் பிரபலம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

    இந்த நிலையில் காஷ்மீரின் வைஷ்ணோதேவி கோவில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    மேலும் வைஷ்ணோ தேவி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். அதே நேரம் காயம் அடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க : டெல்லியில் ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் - வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Jammu and Kashmir

    அடுத்த செய்தி