ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவிலில் பனிப்பொழிவு.. பக்தர்கள் அதிகமாக பகிரும் வீடியோ..

ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவிலில் பனிப்பொழிவு.. பக்தர்கள் அதிகமாக பகிரும் வீடியோ..

மாதா வைஷ்ணோ தேவி கோவில்

ஜம்மு காஷ்மீர், திரிகுடா மலையில் அமைந்திருக்கும் மாதா வைஷ்ணோ தேவி கோவில் இருக்கும் பகுதியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.

  • Share this:
ஜம்மு காஷ்மீர், திரிகுடா மலையில் அமைந்திருக்கும் மாதா வைஷ்ணோ தேவி கோவில் இருக்கும் பகுதியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. கோவிலைச் சுற்றி பனிப்பொழிவின் காட்சி வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் திரிகுடா மலைகளில் உள்ள குகைப் புனிதஸ்தலமான வைஷ்ணோ தேவி குகைக் கோயிலுக்கான புனித யாத்திரை  ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தப் கோயிலின் யாத்திரை மார்ச் மாதம் 2020 முதல் ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி வரை 5  மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வைஷ்ணோ தேவி கோவில், ஜம்மு-காஷ்மீர்


மாதா வைஷ்ணோ தேவி


வைஷ்ணோ தேவி கோவில், ஜம்மு-காஷ்மீர்


வைஷ்ணோ தேவி கோவில், ஜம்மு-காஷ்மீர்


வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் வைஷ்ணோ தேவி கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோவிலை ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் குழு பராமரித்து வருகிறது. உதம்பூர் என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை மேற்கொள்வதற்காக இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Gunavathy
First published: