Home /News /national /

புத்தாண்டு வழிபாடு: கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்!

புத்தாண்டு வழிபாடு: கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் புத்தாண்டு வழிபாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் திரிகூட மலையில் உள்ள புகழ்பெற்ற மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் புத்தாண்டு தினத்தன்று வழிபடுவதற்காக அதிகளவில் பக்தர்கள் கூட்டம் திரண்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

    நள்ளிரவுக்கு பின்னர் கோவிலில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாக பிரதிநிதிகள் விரைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக கோவிலின் மருத்துவ அதிகாரி கோபால் தத் கூறும்போது, மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குறித்த சரியான எண்ணிக்கை இன்னும் வெளிவரவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : பாஜகவில் இணைந்த கிரிக்கெட் பிரபலம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

    காயமடைந்தவர்கள் நரைனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதேபோல், காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால், மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இதனிடையே, வைஷ்ணோ தேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிர் இழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க : டெல்லியில் ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் - வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Jammu and Kashmir

    அடுத்த செய்தி