வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு முன்பதிவு தொடக்கம்.. 300 ரூபாய் கட்டணத்தில் தேவஸ்தான இணையதளத்தில் பதிவு செய்யலாம்..

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு முன்பதிவு தொடக்கம்.. 300 ரூபாய் கட்டணத்தில் தேவஸ்தான இணையதளத்தில் பதிவு செய்யலாம்..

திருப்பதி- கோப்புப் படம்

திருப்பதியில் 10 நாட்கள் நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு துவங்கியது.

 • Share this:
  வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறக்க அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. டிசம்பர் 25ம் தேதி துவங்கும் வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்முறையாக 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து 300 ரூபாய் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

  கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புதுச்சேரி - திருப்பதி இடையிலான பேருந்து சேவை மீண்டும் துவங்கியுள்ளது. புதுச்சேரியில் காலை 9 மணிக்கும், திருப்பதியிலிருந்து இரவு 10 மணிக்கும் பேருந்துகள் இயக்கபடவுள்ளன. புதுச்சேரியிலிருந்து இரவு பேருந்து சேவை விரைவில் துவங்கும் எனவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க...70 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்கள் இணையத்தில் வெளியானது..

  வழக்கமாக ஆண்டுதோறும் பக்தர்கள் வருகையை ஒட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: