வைகோ, வில்சன், சந்திரசேகர் உள்ளிட்ட 5 தமிழக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் நேற்று முடிவடைந்தது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி, மக்களவைக்கு தேர்வானதால் அந்த இடம் காலியானது.
இதனை ஒட்டி, 6 எம்.பி.க்கள் புதிதாக போட்டியின்றி தேர்வாகினர். திமுகவில் இருந்து வில்சன், சண்முகம், அதிமுகவில் இருந்து முகம்மது ஜான், சந்திரசேகர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகிய 5 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று வைகோ, வில்சன், சண்முகம், சந்திரசேகர், முகம்மது ஜான் ஆகிய 5 பேரும் மாநிலங்களவையில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டனர்.
அன்புமணி இன்று பதவியேற்றுக்கொள்ளவில்லை. பாமக தலைவர் ராமதாஸ்-ன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதால், அவர் குடும்பத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
5 பேரும் தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டனர். ”இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன்” எனக்கூறி 5 பேரும் உறுதிமொழி எடுத்தனர்.
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.