ஹோம் /நியூஸ் /இந்தியா /

உலகப் பாரம்பரிய நகரமாகும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த ஊர்!

உலகப் பாரம்பரிய நகரமாகும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த ஊர்!

வாட்நகர்

வாட்நகர்

குஜராத்தில் இருக்கும் மோடியின் பிறந்த ஊரான வாட் நகரை உலகப் பாரம்பரிய நகரமாக அறிவக்க யுனெஸ்கோவிடம் இந்தியா பரிந்துரைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Vadnagar | Tamil Nadu

உலகம் முழுவதும் உள்ள கலாச்சார, பாரம்பரிய சின்னங்களை அதன் பழமை மாறாமல் காக்கும் பணியை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யுனேஸ்கோ மேற்கொண்டு வருகிறது. உலகம முழுவதும் உள்ள பழமையான பாரம்பரிய நகரங்களை அடையாளம் கண்டு அவற்றை பாராம்பரிய நகரங்களாகவும் அறிவித்து வருகிறது யுனெஸ்கோ. அதன்படி ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் நகரங்களை யுனெஸ்கோ அமைப்பிறகு பரிந்துரைக்கும். அப்படி பரிந்துரைக்கப்படுகின்ற நகரங்களின் தொன்மை, அதன் வரலாறு கலாச்சார, பண்பாட்டு பின்னனி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து தகுதி இருக்கும் பட்சத்தல் அந்த நகரங்களை பாராம்பரிய நகரங்களாக யுனெஸ்கோ அறிவிக்கும். அதன்படி இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள சில நகரங்களின் பட்டியலை யுனெஸ்கோவிடம் கொடுத்திருக்கிறது இந்தியா. அந்தப் பட்டியலில் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி பிறந்த ஊரான வாட்நகரும் ஒன்று.

இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை யுனெஸ்கோவிடம் வழங்கியுள்ள பட்டியலில் மொதேருா நகரில் இருக்கும் மிகப் பிரபலமான சூரியக் கோவில் மற்றும் திரிபுரா மாநிலத்தில் உனகோட்டி நகரில் இருக்கும் பாறைக் குடைவுக் கோவில் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு கோவில்களையும் பாரம்பரியச் சின்னங்களாகவும், வாட் நகரை பாரம்பரிய நகரமாகவும் அறி்விக்க இந்திய தொல்லியல் துறை பரிந்துரைத்துள்ளது.

உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்படுதவதற்கு தகுதியானவற்றை அடையாளப்படுத்தி வருவதற்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையோடு, தற்போது இந்தியாவில் 52 இடங்கள் உலகப் பாராம்பரிய சின்னங்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அந்தச் சின்னங்கள் இந்தியாவின் பன்முக கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிப்பவைகளாக அமைந்துள்ளன.

Also Read : ஆம் ஆத்மிக்கு ரூ.60 கோடி கொடுத்தேன்.. பகீர் கிளப்பிய சுகேஷ் சந்திரசேகர்.. அதிரும் டெல்லி அரசியல்!

கடந்த ஆண்டு யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் இந்தியாவில் இருந்து ஆறு இடங்கள் சேர்க்கப்பட்டன. அவை, சாத்புரா புலிகள் காப்பகம், வாரணாசியில் இருக்கும் கங்கை கரை, கர்நாடகாவில் இருக்கும் பெருங்கற்காலத் தளமான ஹைர் பெனக்கல், மராட்டிய சாம்ராஜ்யத்தின் ராணுவக் கட்டுமானம், நர்மதை பள்ளத்தாக்கு மற்றும் காஞ்சிபுரத்தில் இருக்கும் கோவில்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு தொல்லியில் துறை மூன்று இடங்களை யுனெஸ்கோவின் பாராம்ரியச் சின்ன தற்காலிக பட்டியலில் சேர்த்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் மோடி பிறந்த ஊரான வாட் நகர், பாரம்பரிய வரலாற்றுச் செழுமையுடயது என்றும், வாட் நகரின் வரலாறு எட்டாம் ஆண்டில் இருந்தே தொடங்குவதாகவும் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். இந்திய தொல்லியல் துறை அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை யுனெஸ்கோ ஆய்வு செய்து, அதன் தொன்மை மற்றும் வரலாற்றுப் பின்னனி இவைகளின் அடிப்படையில் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கும்.

First published:

Tags: PM Narendra Modi