VACCINE WILL BE PROVIDE FOR ABOVE 60 AGE PEOPLE FROM TOMORROW SRS
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாளை முதல் கொரோனா தடுப்பூசி - செய்ய வேண்டியது என்ன?
தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45வயது முதல் 59 வயதினர் கூட்டு நோய்களுடன் இருந்தால் அவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45வயது முதல் 59 வயதினர் கூட்டு நோய்களுடன் இருந்தால் அவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் வயது சான்றுக்காக ஆதார் அட்டை, ஓய்வூதிய அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை என ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு தடுப்பூசி மையத்துக்கு வர வேண்டும். எந்த தடுப்பூசி மையத்துக்கும் யார் வேண்டுமானாலும் செல்லலாம். அங்கு சென்ற பிறகு நேரடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களின் விவரங்கள் தடுப்பூசி மையத்தில் சேகரிக்கப்பட்டு கோ வின் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இரண்டாவது டோஸ் குறித்த தகவல்கள் பதிவு செய்யும் செல்போன் எண்ணில் வரும்.
ஓய்வூதிய சங்கங்கள், குடியிருப்போர் சங்கங்கள், ஊழியர்கள் சங்கங்கள் மூலமாக ஒருங்கிணைந்து ஒன்றாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 45 வயது முதல் 59 வயது வரையிலான கூட்டு நோய்களுடன் இருப்பவர்கள் ஒரு மருத்துவரிடமிருந்து தனக்கு என்ன கூட்டு நோய் உள்ளது என குறிப்பிட்டு ஒரு கடிதம் பெற்று வரவேண்டும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்துக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கு தடுப்பூசி கிடைக்கும். ரூ.150 தடுப்பு மருந்தின் விலையாகும். ரூ.100 சேவை கட்டணமாகும்.
தமிழ்நாட்டில் 761 தனியார் மருத்துவமனைகளிலும் 529 அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் முன் பதிவு செய்ய விரும்புபவர்கள் கோ வின் செயலி ( cowin2.0 app) மூலம் செய்துக் கொள்ளலாம். செல்போன் எண், வயது சான்றிதழ் ஆகியவை பதிவேற்றம் செய்து, எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் என தேர்வு செய்த பிறகு எந்த தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற குறுஞ்செய்தி செல்போன் எண்ணுக்கு வரும்.