தகுதிவாய்ந்த அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்துவோம் என கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதனைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திவிடுவோம் என மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. இன்றுடன் இந்த வருடம் முடிய இருக்கிறது. இன்றைக்கும் கூட அனைவருக்கும் தடுப்பூசி சென்று சேரவில்லை” என தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நிலவரப்படி நாட்டில் புதிதாக 16,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Also read: இந்தியாவில் ஓமைக்ரான் பாதித்த நபர் மாரடைப்பால் மரணம்...
இதைத்தொடர்ந்து, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,38,804 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,585 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக 3,42,66,363 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.36% என்றளவில் உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 220 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மொத்தமாக 4,83,080 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, 91,361 சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் இதுவரை 144.54 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவற்றில் 84.51 கோடி பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 60.15 கோடி பேர் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also read: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Omicron