கிர் காட்டில் தொடரும் சிங்கங்களின் உயிரிழப்பு: வைரஸ் காய்ச்சலை தடுக்க தடுப்பூசி

கிர் காட்டில் தொடரும் சிங்கங்களின் உயிரிழப்பு: வைரஸ் காய்ச்சலை தடுக்க தடுப்பூசி
கிர் வனப்பகுதி- ஆசிய சிங்கம்
  • News18
  • Last Updated: October 8, 2018, 9:14 AM IST
  • Share this:
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் சிங்கங்களுக்கு வைரஸ் நோய் பரவி வருவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குஜராத்தின் கிர் காடுகளில் நூற்றுக்கணக்கான ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. இதில் 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 523 சிங்கங்கள் இருந்தன. இதனிடையே வைரஸ் தொற்றுநோய் உள்ளிட்ட பல காரணங்களால் கிர் வனப்பகுதியில் உள்ள  சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அதனால் இதை அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 4 வாராங்களில் மட்டும் இந்த கிர் வனப்பகுதியில் 23 ஆசிய சிங்கங்கள் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிடிவி என்ற வைரஸ் நோய் தாக்குதலால்தான் சிங்கங்கள் இறந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் பரவினால், விலங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, முக்கிய உறுப்புகளை செயலிழக்க செய்துவிடும். எனவே கிர் வனப்பகுதியில் எஞ்சியுள்ள சிங்கங்களை காப்பாற்ற, அங்கு பரவி  வரும் வைரஸ் நோயை கட்டுபடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இதன் முதல்கட்டமாக வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில், 36 சிங்கங்களை பிடித்து சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து, அவற்றுக்கு அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
First published: October 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading