ஹோம் /நியூஸ் /இந்தியா /

மூதாட்டியின் கம்மலை பறித்து செல்ல முயற்சி... திருடர்களை நடுரோட்டில் விளாசிய சிங்கப்பெண்..!

மூதாட்டியின் கம்மலை பறித்து செல்ல முயற்சி... திருடர்களை நடுரோட்டில் விளாசிய சிங்கப்பெண்..!

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் கம்மலை பறித்து செல்ல முயன்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மூதாட்டியின் கம்மலை பறித்து செல்ல முயன்ற மர்ம நபர்களுடன் இளம்பெண் துணிச்சலுடன் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீரட் மாவட்டம் மைதா மொகல்லாவை சேர்ந்த மூதாட்டி தனது பேத்தி ரியா அகர்வாலுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் கம்மலை பறித்து செல்ல முயன்றனர்.

அப்போது ரியா அகர்வால் மர்ம நபரின் சட்டையை பிடித்து சண்டையிட்டுள்ளார். தொடர்ந்து அவர்கள் இளம்பெண்ணை கீழே தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து அன்று இரவே காவல்துறையினர் திருடர்களை தேடி பிடித்து கைது செய்தனர்,

First published:

Tags: Chain Snatching, Uttar pradesh, Viral Video