பெற்ற 3 குழந்தைகளை தவிக்கவிட்டு 16 வயது சிறுவனுடன் மாயமான தாய்... அதிர்ச்சி சம்பவம்

பெற்ற 3 குழந்தைகளை தவிக்கவிட்டு 16 வயது சிறுவனுடன் மாயமான தாய்... அதிர்ச்சி சம்பவம்

மாதிரி படம்

மாயமான பெண் மற்றும் அந்த சிறுவன் கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

 • Share this:
  உத்திரபிரதேசத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 29 வயது பெண் 16 வயது சிறுவனுடன் மாயமாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  உத்திரபிரதேசம், கோரக்பூரில் கடந்த புதன்கிழமை சிவராத்திரி அன்று 29 வயது பெண் 16 வயது சிறுவனுடன் மாயமாகி உள்ளார். இருவரின் குடும்பத்தினரும் பெண் மற்றும் சிறுவனை தேடி எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனின் குடும்பத்தார் காம்பீர்கஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  சிறுவனின் குடும்பத்தினர் கொடுத்த புகாரை அடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது. சிறுவனின் குடும்பத்தினார் அளித்த புகாரின் அடிப்பைடையில் பெண் மீது 363 (கடத்தலுக்கான தண்டனை) மற்றும் 365 ஐபிசி (ஒரு நபரை அடைத்து வைப்பதற்காக ரகசியமாகவும் தவறாகவும் கடத்தப்படுதல் அல்லது கடத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  மாயமான பெண் மற்றும் அந்த சிறுவன் கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இருவருக்கும் உள்ள வயது இடைவெளி காரணமாக அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவில்லை என்று அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக கிராம வட்டார அலுவலர் கூறுகையில், சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்“ என்றுள்ளார்.

  மேலும் அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், 3 குழந்தைகளுக்கு தாயான அவள் இப்படி செய்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. சில காலமாக அவரது நடத்தையில் மாறியிருந்து. ஆனால் இதுப்போன்று நடக்கும் என சற்றும் நினைத்து கூட பார்க்கவில்லை“ என்றார்.
  Published by:Vijay R
  First published: