உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூச்சுச்திணறலால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ஆக்சிஜன் உதவியுடன் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்.
பரேலியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஷபியா என்பவர் நுரையீரல் நோயால் கடந்த 5 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்து வருகிறது. இந்நிலையில் மாணவியின் கோரிக்கையை ஏற்று தேர்வின்போது ஆக்சிஜன் பயன்படுத்திக் கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மாணவி ஷபியா அரசு பெண்கள் கல்லூரியில் நேற்று ஆக்சிஜன் உதவியுடன் தேர்வெழுதினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.