உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.பி மகன் மீது துப்பாக்கிச்சூடு! -தன்னைத்தானே ஆள்வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினாரா?

ஆயுஷ்

காவல்துறையினரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை எம்.பியின் மகன் ஆயுஷின் உறவினரான ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
உத்தரப்பிரதேச பாஜக எம்.பி ஒருவரின் மகன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் Mohanlalganj தொகுதியிம் எம்.பியாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த கவுஷல் கிஷோர். இவருடைய 30 வயது மகன் ஆயுஷ்-ஐ லக்னோவில் நேற்று மர்ம நபர்கள் துப்பாகியால் சுடப்பட்டார். படுகாயங்களுடன் போராடிய ஆயுஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இடுப்பு மற்றும் தோள்பட்டைக்கு கீழே என இரண்டு குண்டு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு ஆபத்தின்றி அவர் பிழைத்துள்ளார். ஆயுஷ் மீது பாய்ந்த குண்டுகள் உரிமம் பெற்ற துப்பாக்கிக்கு சொந்தமானவை என அறிந்த காவல்துறையினர், ஆயுஷின் உறவினரான இளைஞர் ஒருவர் மீது சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதனிடையே எம்.பியின் மகனே ஆள் வைத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்ட விவகாரம் தற்போது காவல்துறையினரின் விசாராணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆதர்ஷ் என்ற அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை எம்.பியின் மகன் ஆயுஷின் உறவினரான ஆதர்ஷ் தெரிவித்துள்ளார். யாரோ ஒருவரை போலீசில் சிக்க வைக்கும் நோக்கில் தன்னை ஆள் வைத்து சுடவேண்டும் என்று ஆயுஷ் தெரிவித்ததால் நானே அவரை சுட்டேன் என கூறியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் ஆயுஷ் தலைமறைவாக இருந்து வருகிறார்.

சம்பவம் தொடர்பாக லக்னோ காவல் ஆணையர் டி.கே.தாக்கூர் கூறுகையில், நேற்று (செவ்வாய்) மதியம் 2.10 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. சம்பவத்தின் போது எம்.பியின் மகன் ஆயுஷின் உறவினரான ஆதர்ஷ் உடன் இருந்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தோம். எம்.பியின் மகன் வீட்டில் இருந்து துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளோம்.

இதுவரை எழுத்துப்பூர்வ புகாரை யாரும் அளிக்கவில்லை. எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படவில்லை. எம்.பியின் மகன் மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் சென்ற இடம் தெரியவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகான உண்மையான காரணத்தை விரைவில் கண்டறிவோம் என தெரிவித்தார்.
Published by:Arun
First published: