பேருந்து மீது லாரி மோதி விபத்து- சாலையில் தூங்கிக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு

விபத்து

பழுதாகி சாலையின் ஓரம் நின்றிருந்த பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

 • Share this:
  பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து 140 ஊழியர்களுடன் இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று பீகார் மாநிலம் நோக்கி சொன்றுக்கொண்டிருந்தது. உத்தரப் பிரதேசம் பாரபங்கி மாவட்டம், கோட்வாலி ராமசேனா பகுதியில் நள்ளிரவில் பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்து பழுதாகியுள்ளது. இதையடுத்து பேருந்தை  ஓட்டுநர் சாலையின் ஓரமாக அதனை நிறுத்தியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பேருந்தில் இருந்த சிலர் சாலையிலேயே படுத்து உறங்கியுள்ளனர்.  இந்நிலையில், நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரியொன்று பேருந்தில் மோதியது. இதையடுத்து சாலையில் படுத்திருந்தவர்கள் மீது பேருந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


  மேலும் படிக்க: பிச்சை எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது - எவரும் விருப்பப்பட்டு பிச்சை எடுக்கவில்லை: உச்ச நீதிமன்றம்!


  சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகிஆதித்யநாத்தை தொடர்புகொண்டு பேசி கேட்டறிந்துள்ளார்.

  இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் எப்போது அமலாகும்? மத்திய அமைச்சர் விளக்கம்!

  உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி உட்பட பலரும் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  Published by:Murugesh M
  First published: