ஹோம் /நியூஸ் /இந்தியா /

உத்தரபிரதேசத்தில் எல்.இ.டி. டிவி வெடித்து விபத்து... 16 வயது சிறுவன் பலி...

உத்தரபிரதேசத்தில் எல்.இ.டி. டிவி வெடித்து விபத்து... 16 வயது சிறுவன் பலி...

இடிந்த சுவர்

இடிந்த சுவர்

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக வோல்டேஜ் காரணமாக டிவி வெடித்து சிதறியிருக்கலாம் என கூறுப்படுகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Lucknow, India

  உத்தரபிரதேசத்தில் எல்.இ.டி டிவி வெடித்து சிதறியதில் 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

  உத்தரபிரதேசம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ஓமேந்திரா(16) என்ற சிறுவன் தனது வீட்டில் உள்ள எல்.இ.டி டிவியில் குடும்பத்துடன்  படம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த டிவி வெடித்து சிதறியது. சிலண்டர் வெடித்தது போல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

  அப்போது தொலைக்காட்சி வெடித்து வீட்டில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தது தெரியவந்தது. தொலைக்காட்சி பொருத்தப்பட்டிருந்த சுவரே இடிந்து இருந்தது. வெடித்து சிதறிய டிவியின் பாகங்கள் எதிரில் அமர்ந்திருந்த சிறுவனின் கண், கழுத்து மார்பு பகுதிகளில் பாய்ந்திருந்தது.

  அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சிறுவனின் தாய், நண்பர் கரண் ஆகியோரும் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  இதையும் வாசிக்க: நவராத்திரி விழாவின் கர்பா நடன நிகழ்வில் கல்லெறிந்த இளைஞர்களை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த குஜராத் காவல்துறை

  இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக வோல்டேஜ் காரணமாக டிவி வெடித்து சிதறியிருக்கலாம் என கூறுப்படுகிறது. லித்தியம் ஐயான் பேட்டரிகள் பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன், எலெக்ட்ரிக் பைக்குகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளன. அனால் எல்.இ.டி டிவி வெடித்து விபத்து ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Accident, Television, Uttar pradesh