Home /News /national /

இடைத்தேர்தலில் இமாலய வெற்றி - முதலமைச்சர் பதவியை தக்க வைத்தார் புஷ்கர் சிங் தாமி

இடைத்தேர்தலில் இமாலய வெற்றி - முதலமைச்சர் பதவியை தக்க வைத்தார் புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி

இடைத்தேர்தலில் 55 ஆயிரத்து 25 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார் புஷ்கர் சிங் தாமி.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சரான புஷ்கர் சிங் தாமி சம்பாவாட் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதிக்கு மே 31ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி 58,258 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா கதோரி வெறும் 3,233 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். இதையடுத்து, 55 ஆயிரத்து 25 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார் புஷ்கர் சிங் தாமி.

    உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்று மார்ச் மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் பாஜக வெற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் முதலமைச்சராக இருந்த புஷ்கர் தாமி தான் போட்டியிட்ட கதிமா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இதையடுத்து இவருக்கு மீண்டும் முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்படுமா எனக் கேள்வி எழுந்த நிலையில், கட்சி மேலிடம் இவரையே முதலமைச்சராக தேர்வு செய்தது. ஆறு மாதத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சம்பாவாட் தொகுதி பாஜக எம்எல்ஏ கைலாஷ் சந்திரா ராஜினாமா செய்து முதலமைச்சர் புஷ்கருக்கான வழிவிட்டார். இதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் புஷ்கர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.



    வெற்றி பெற்ற முதலமைச்சர் புஷ்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: எல்லா மசூதிகளிலும் சிவலிங்கம் உள்ளதா என தேடிக்கொண்டே இருப்பீர்களா? - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி

    உத்தரகாண்ட் மாநிலத்தை போலவே, கேரளா மற்றும் ஒடிசாவிலும் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. கேரளா மாநிலத்தில் உள்ள திரிக்ககரா தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் சிபிஎம் வேட்பாளர் ஜோ ஜோசப், காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ்சிடம் தோல்வியடைந்தார். ஒடிசா மாநிலத்தின் பிரஜ்ராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதாதள வேட்பாளர் அல்கா மொஹாந்தி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: PM Modi, Uttarkhand

    அடுத்த செய்தி