முகப்பு /செய்தி /இந்தியா / அங்கிள் என அழைத்த 18 வயது பெண் மீது 35 வயது கடைக்காரர் கொலைவெறித் தாக்குதல்

அங்கிள் என அழைத்த 18 வயது பெண் மீது 35 வயது கடைக்காரர் கொலைவெறித் தாக்குதல்

பலத்த காயமடைந்த அந்த 18 வயது பெண் ஆக்சிஜன் துணையுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பலத்த காயமடைந்த அந்த 18 வயது பெண் ஆக்சிஜன் துணையுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பலத்த காயமடைந்த அந்த 18 வயது பெண் ஆக்சிஜன் துணையுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 • Last Updated :

  அங்கிள் என அழைத்ததற்காக 18 வயது பெண்ணை 35 வயது கடைக்காரர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  சிறுவர்கள், பெரியவர்களை மரியாதை நிமித்தமாக அங்கிள் என அழைப்பது வழக்கம். ஆனால், இளம் வயதிலேயே தன்னை அங்கிள் என பெண் ஒருவர் அழைத்ததால் ஆத்திரமடைந்த 35 வயது நபர் ஒருவர், 18 வயது பெண்ணை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

  உத்தரகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சித்தர்கஞ்ச் டவுனில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மோகித் குமார் என்ற 35 வயது நபர் காதிமா சாலையில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கடையில் கடந்த டிசம்பர் 19ம் தேதி நிஷா அகமது என்ற 18 வயது பெண் பேட்மிண்டன் ராக்கெட் ஒன்றை வாங்கியிருக்கிறார்.

  Also read:  'தூக்கி அடிச்சிருவேன்' - போலீஸ் அதிகாரியை மிரட்டிய எம்.எல்.ஏ.. வைரலாகும் வீடியோ

  வீட்டுக்கு சென்று பார்த்த போது தான் அந்த ராக்கெட்டின் ஸ்டிரிங்குகள் உடைந்திருப்பதை பார்த்திருக்கிறார். எனவே அந்த ராக்கெட்டினை கடையில் மாற்றி வருவதற்காக கடந்த டிசம்பர் 21ம் தேதி மோகித் குமாரின் கடைக்கு சென்றுள்ளார் அந்த 18 வயது பெண்.

  ஆனால் கடைக்காரரான மோகித்தை, 18 வயது பெண் அங்கிள் என அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர் மோகித், அப்பெண்ணை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இந்த தாக்குதலில் அப்பெண்ணுக்கு தலையில் பலத்த காயமடைந்து ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். பலத்த காயமடைந்த அந்த 18 வயது பெண் ஆக்சிஜன் ஆதரவுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

  Also read:  ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள்.. 2022ல் இந்தியாவில் என்னென்ன நடக்கும் - பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்

  top videos

   மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து போலீசார் தாமாக முன்வந்து கடைக்காரர் மோகித் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் அப்பெண்ணின் தந்தையும் கடைக்காரர் மீது புகார் அளித்திருக்கிறார். கடைக்காரர் மீது 354, 323, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

   First published: