பனிப்பாறை சரிவு காரணமாக உத்தரகாண்டின் Dhauliganga ஆற்றில் திடீர் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி?

பனிப்பாறை சரிவு காரணமாக உத்தரகாண்டின் Dhauliganga ஆற்றில் திடீர் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி?

உத்தரகாண்டில் திடீர் வெள்ளம்

பனிப்பாறை சரிவு காரணமாக அருகாமை கிராமங்கள், ரிஷிகங்கா நீர் மின் திட்டம் கடுமையான சேதத்தை சந்திருக்கின்றன.

  • Share this:
இமாலய மலைத்தொடரில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக அங்குள்ள அலோக்நந்தா மற்றும் Dhauliganga ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 100 முதல் 150 பேர்  வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக சாமோலி மாவட்டத்தில் உள்ள Alaknanda மற்றும் Dhauliganga ஆறுகளை ஒட்டிய மலைத்தொடரில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை வெடித்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. பனிப்பாறைகள் உருண்டு வந்து ஆற்றில் விழுந்ததன் காரணமாக இந்த ஆறுகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

பனிப்பாறை சரிவு காரணமாக அருகாமை கிராமங்கள், ரிஷிகங்கா நீர் மின் திட்டம் கடுமையான சேதத்தை சந்திருக்கின்றன. இதில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை பலியாகியிருக்கக்கூடும் என்று அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தற்போது வரை 50 பேர் காணாமல் போயிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.



தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தும் மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு விரைந்துள்ளார். அங்கு சென்ற முதல்வர் திரிவேந்திர சிங் கூறுகையில், ரினி கிராமத்தில் அமைந்துள்ள ரிஷிகங்கா நீர் மின் திட்டம் இந்த திடீர் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளது. அலோக்நந்தாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றார். பொதுமக்கள் யாரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டு கோள் விடுத்தார்.



டெஹ்ராடூனில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து Mi-17 மற்றும் ALH Dhruv ரக ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வெள்ள பாதிப்பு குறித்து உத்தரகண்ட் முதல்வர் ராவத்தை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி மீட்புப் பணிகள் மற்றும் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். இதே போல உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராவத்தை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்துள்ளார்.
Published by:Arun
First published: