கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் - உத்தர்கண்ட் முதல்வர் சர்ச்சை பேச்சு!

கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் - உத்தர்கண்ட் முதல்வர் சர்ச்சை பேச்சு!

தீரத் சிங் ராவத்

கடந்த செவ்வாயன்று டெஹ்ராடூனில் உத்தரகண்ட் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் தீரத் சிங் ராவத் பேசினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உத்தர்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகியதை அடுத்து புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் சமீபத்தில் பதவியேற்றுள்ளார்.

கடந்த செவ்வாயன்று டெஹ்ராடூனில் உத்தரகண்ட் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் தீரத் சிங் ராவத் பேசினார். அப்போது பேசிய இவர், ''பெண்கள் கால் முட்டி தெரியும்படியும், கிழிந்த ஜீன்ஸ்களையும் அணிகிறார்கள். இந்த சமூகத்திற்கு இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். இவை நல்லதா? இந்த காலச்சாரம் எங்கிருந்து வந்தது. வீட்டிலா, பள்ளியிலா அல்லது வேறு எங்கிருந்து வருகிறது. யாரிடம் இந்த தவறு உள்ளது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்காக இப்படி ஆடைகளை அணியலாமா. மேல்நாட்டு கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக நாம் நம்புவதே இதற்கு காரணம். இது போன்று உடை அணிவது சமூக முறிவுக்கு வழி வகுக்கிறது என்றார்.

மேற்கத்திய உலகம் நமது யோகா பாரம்பரியத்தை பின்பற்றி, மூடிமறைக்கும் போது, ​​இந்தியர்கள் நிர்வாணத்தை நோக்கி ஓடுகிறார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் வீட்டில் சரியான கலாச்சாரம் கற்பிக்கப்படும் ஒரு குழந்தை, அவர் எவ்வளவு நவீனமானவராக இருந்தாலும், வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார் என்றும் கூறினார். முதல்வரின் இந்த கருத்தை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ட்விட்டரில் #rippedjeans, #UttarakhandCM ஆகிய ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

இந்த ஹேஷ்டாக்குகளில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், அவரது உரையின் ஒரு கிளிப்பை இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் மகிலா பகிர்ந்த நிலையில், அதில் "மிஸ்டர் பாஜக உத்தரகண்ட் முதல்வரே ஒழுக்கம் உங்கள் பார்வையில் தான் உள்ளது, பெண்கள் அணியும் உடையில் அல்ல என குறிப்பிட்டுள்ளார்

மேலும் நான் ஒரு அரசியல்வாதி, நான் ஸார்ட்ஸ் அணிகிறேன். நான் விரும்பிய உடை நான் அணிகிறேன், எனக்கு பிடித்த உணவை உண்கிறேன். வேறு யாரும் எனக்கானதை தீர்மானிக்க முடியாது என டெல்லி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதிகா என்பவர் தெரிவித்துள்ளார்.

Also read... கோக்கைன்னுக்கு அடிமையாவது போல கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் அடிமையாகும் மக்கள்: MIT வெளியிட்ட ஆய்வறிக்கை!

கிழிந்த ஜீன்ஸால் பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. இது பா.ஜ., தலைவர்களின் மோசமான மனநிலை, முதலில் அதை மாற்றுங்கள் என்றும் கிழிந்த மூளைகளை விட கிழிந்த ஜீன்ஸ் எவ்வளவோ சிறந்தது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராவத்தின் அமைச்சரவை அமைச்சர்களில் ஒருவரான கணேஷ் ஜோஷி ஒரு பெண்ணின் முன்னுரிமைகள் குறித்து இதே போன்ற சர்ச்சை கருத்துக்களை கூறி இருந்தார். அதில் "பெண்கள் வாழ்க்கையில் செய்ய விரும்பும் எல்லா விஷயங்களையும் பற்றி பேசுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு மிக முக்கியமான விஷயம் அவர்களின் குடும்பத்தினரையும், குழந்தைகளையும் கவனிப்பதே" என்று அவர் கூறினார். இதுவும் பல்வேறு விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: