உத்தரகண்ட் : அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்கள் விடுவிப்பு - முதல்வர் உத்தரவு

முதல்வர் தீரத் சிங் விடுவித்துள்ள 51 கோவில்களில் பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களும் அடங்கும்.

 • Share this:
  உத்தரகண்டில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 51 கோவில்களை அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதாக முதல்வர் தீரத் சிங் ராவத் உத்தரவிட்டுள்ளார்.

  மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை விடுவிக்க வேண்டுமென சத்குரு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பல கோயில்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் சிதைந்து வருவதாக ட்விட்டரில்  வீடியோக்கள் பதிவேற்றப்பட்டது. இதையடுத்து ட்விட்டரில் கோயிலை விடுவிக்க வேண்டும் என்பது தொடர்பான ஹேஸ்டேக் டிரெண்டானது.

  இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 51 கோயில்களை விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை சட்டசபையில் முதல்வர் தீரத் சிங் ராவத் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு அம்மாநில கவர்னர் பேபி ராணி மவுரியா ஒப்புதல் அளித்துள்ளார்.

   
  Published by:Vijay R
  First published: