ஹோம் /நியூஸ் /இந்தியா /

உத்தராகண்ட் பனிச்சரிவு - 14 மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்பு

உத்தராகண்ட் பனிச்சரிவு - 14 மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்பு

பனிச்சரிவு

பனிச்சரிவு

பனிச்சரிவு விபத்து ஏற்பட்ட பகுதியில், அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஹெலிகாப்டர் மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttarakhand (Uttaranchal), India

  உத்தராகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

  உத்தராகண்ட் தலைநகர் உத்தரகாசியில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி மேற்கொண்டு வந்த 34 பேர் உட்பட 42 பேர் கடந்த மாதம் 25-ம் தேதி மலையேற்றப் பயிற்சிக்கு சென்றனர். இதையடுத்து, திரவுபதி கா தண்டா மலை உச்சிக்கு பயிற்சியாளர்களும், பயிற்றுநர்களும் நேற்றுமுன்தினம் காலை சென்றனர்.

  அப்போது, நிலத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில், திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்படையினர் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், 10 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மேலும், 8 பேர் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் மீட்பு பணி நடைபெற்றது. அதில், மேலும் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து, எஞ்சிய 18 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  பனிச்சரிவு விபத்து ஏற்பட்ட பகுதியில், அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஹெலிகாப்டர் மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டார்.

  Also Read: கேரளாவில் பேருந்துகள் மோதியதில் பயங்கர விபத்து -ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் மரணம்

  உத்தரகாசியில் மலையேற்ற பயிற்சியில் தமிழகத்தின் ஓசூரை சேர்ந்த விக்ரமும் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவசர வேலையால் அந்த குழுவில் இருந்து பாதியில் திரும்பியதால், பனிச்சரிவு விபத்தில் சிக்காமல் தப்பினார். இருந்த போதும், பயிற்சி முடியும் தருணத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Ramprasath H
  First published: