முகப்பு /செய்தி /இந்தியா / உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு - மாயமான 23 பேரை தேடும் பணி தீவிரம்

உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு - மாயமான 23 பேரை தேடும் பணி தீவிரம்

உத்தரகாண்ட் பனிச்சரிவு

உத்தரகாண்ட் பனிச்சரிவு

Uttarakhand Avalanche : உத்தரகாண்ட் பனிச்சரிவ்ல் சிக்கிக் கொண்டுள்ள 23 பேரை தேடும் பணிகள் இன்றும் நடைபெற உள்ளன

  • Last Updated :
  • Uttarakhand (Uttaranchal), India

உத்தராகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 23 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.

உத்தராகண்ட் தலைநகர் உத்தரகாசியில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயின்றுவந்த 34 மலையேற்றப் பயிற்சியாளர்கள், 7 பயிற்றுநர்கள், ஒரு செவிலிய உதவியாளர் ஆகியோர் கடந்த மாதம் 25-ம் தேதி மலையேற்றப் பயிற்சிக்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து, திரவுபதி கா தண்டா மலைஉச்சிக்கு பயிற்சியாளர்களும், பயிற்றுநர்களும் நேற்று காலை சென்றனர். அப்போது, நிலத்திலிருந்து 17,000 அடி உயரத்தில், திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்படையினர் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இதில் 23 பேர் சிக்கிக் கொண்டுள்ள நிலையில், மலையேற்றப் பயிற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தேடுதல் பணிகள் இன்றும் நடைபெற உள்ளன.

Also Read: மலப்புறத்தில் திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு..

இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், மீட்புப்பணிக்கு தேவையான உதவி வழங்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

First published:

Tags: India, Snowfall, Tamil News