பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் 57 தொகுதிகளில் பா.ஜ.க வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.
அதேபோன்றதொரு வெற்றியைப் பெறவேண்டும் என்று பா.ஜ.க தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக உத்தரகாண்ட்டில் வாக்குப் பதிவு நடைபெற்றது. பா.ஜ.க எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸும் தீவிரமாக பணியாற்றியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடைசி கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
டுடே சாணக்கியா வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணி பெரும்பாண்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பா.ஜ.க 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இடிஜி ரிசர்ச் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னணியைப் பெறுகிறது. அதன்படி, பா.ஜ.க கூட்டணி 37 - 40 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி 29 - 32 இடங்களில் வெற்றி பெறும். ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் வெற்றி பெறவாய்ப்புள்ளது. பிற கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நௌ வீடூ கருத்துக் கணிப்பின்படி உத்தரக்காண்ட் மாநிலத்தில ஃபா.ஜ.க முன்னிலையில் வருகிறது. அதன்படி பா.ஜ.க 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 1 தொகுதிகளிலம், பிற கட்சிகள் 1 தொகுதிகளிலும் வெற்றி பெறுகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகளை ShareChat-லும் தெரிந்துகொள்ளலாம்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.