உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறிய நபரின் உதடை கடித்து துப்பி துணிவுடன் தன்னை தற்காத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தரவுலா என்ற பகுதியில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி திருமணமான பெண் ஒருவர் வயலில் வேலை செய்து இருந்துள்ளார்.
அந்த பக்கம் அருகே உள்ள லாவட் பகுதியில் வசிக்கும் மொஹித் சைனி இளைஞரும் வந்துள்ளார். வயலில் பெண் தனியாக வேலை செய்வதை அறிந்து கொண்ட அந்த வாலிபர், பெண்ணின் அருகே வந்து பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். ஆடைகளை களைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். முதலில் பதறிப்போன பெண் பின்னர் சுதாரித்துக்கொண்டு தன்னை தற்காத்துக்கொள்ள தீரமான செயலை செய்துள்ளார்.
தன்னிடம் அத்துமீறிய அந்த வாலிபரின் உதட்டை ஆக்ரோஷத்துடன் கடித்து சதையை துப்பி ஏறிந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத வாலிபர் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பெண்ணை மீட்டு வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர். முதலில் வாலிபர் மோஹித்தை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி தந்தனர்.
இதையும் படிங்க: தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி... திருடனின் கைவிரலை கடித்து துண்டாக்கிய பெண்!
பின்னர் அந்த நபரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பெண் மற்றும் அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் துணிவான நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இதேபோல, சில நாள்களுக்கு முன்னர் தான் உத்தரப் பிரதேசத்தின் கவுசாம்பி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னிடம் திருடி மானபங்கம் செய்ய வந்த நபரின் கை விரலை கடித்து துண்டாக துப்பிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Lip, Rape, Uttar pradesh