பாஜகவில் இருக்கும் பெண் அரசியல்வாதிகளை கண்ணியக் குறைவாக பேசிய உ.பி.சாமியார்

சர்ச்சைக்குரிய உ.பி.சாமியார் நரசிங்கானந்த்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள காஜியாபாத் தாஸ்னா கோயிலில் இருக்கும் சாமியார் நரசிங்காநந்த் பொதுவாக பலராலும் நேசிக்கப்படுபவர். இவரது சொற்பொழிவுகளைக் கேட்க பல இந்துக்களும் கோயிலுக்கு வருவதுண்டு, ஆனால் சமீபத்தில் இவர் பாஜக பெண் அரசியல்வாதிகளைப் பற்றி கூறிய தரக்குறைவான கருத்தினால் தனது பெயருக்கு களங்கம் விளைவித்துக் கொண்டுள்ளார்.

  • Share this:
    உத்தரப் பிரதேசத்தில் உள்ள காஜியாபாத் தாஸ்னா கோயிலில் இருக்கும் சாமியார் நரசிங்காநந்த் பொதுவாக பலராலும் நேசிக்கப்படுபவர். இவரது சொற்பொழிவுகளைக் கேட்க பல இந்துக்களும் கோயிலுக்கு வருவதுண்டு, ஆனால் சமீபத்தில் இவர் பாஜக பெண் அரசியல்வாதிகளைப் பற்றி கூறிய தரக்குறைவான கருத்தினால் தனது பெயருக்கு களங்கம் விளைவித்துக் கொண்டுள்ளார்.

    இவரது முழுப்பெயர் யதி நரசிங்காநந்த் சரஸ்வதி. இவரது பேச்சு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பாலோயர்களைக் கொண்டது.

    “ஆன்லைன் மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எனக்கு ஃபாலோயர்கள் உள்ளனர். அயல்நாடுகளிலும் என் பேச்சுகளை பின் தொடர்பவர்கள் உண்டு” என்று யதி நரசிங்கானந்த் சரஸ்வதி ஆங்கில ஊடகமான தி பிரிண்ட் என்ற ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். இவர் இந்தக் கோயிலின் தலைமை குருக்களாகவும் உள்ளார்.

    இவர் மேல் பல சர்ச்சைகளும் உண்டு. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கோயிலுக்குள் ஒரு சிறுவன் தண்ணீர் தாகம் எடுத்து நுழைய அந்தச் சிறுவன் இந்து அல்ல என்பதை அறிந்து அவனை கோயிலில் இருந்த பக்தர்கள் விரட்டி அடித்த சம்பவத்தின் போது இந்த நரசிங்கானந்த் சரஸ்வதி மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இந்தச்சம்பவம் நடந்து இருவாரங்களில் இந்த சாமியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலிருந்து இந்த தாஸ்னா கோயிலுக்குள் நுழைய வேண்டுமெனில் ஆதார் இல்லாமல் நுழைய முடியாது.

    சமூக ஊடகங்கள் மூலமே பிரபலமான இந்த யதி நரசிங்காநந்த் சரஸ்வதி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. இதில் பாஜகவில் இருக்கும் பெண் அரசியல்வாதிகளின் நடத்தையை விமர்சித்து கண்ணியக் குறைவாக அவதூறு பேசியதாக இவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதாவது பாஜகவில் இருக்கும் ஆண் அரசியல்வாதிகளின் ஆசைக்கு இந்தப் பெண் அரசியல்வாதிகள் இடம்கொடுக்கின்றனர் என்ற தொனியில் நரசிங்கானந்த் அவதூறாக பேசியதாக எழுந்தது சர்ச்சை.

    இது ஆளும் பாஜகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன

    ஆனால் நரசிங்கானந்த் சரஸ்வதி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து தீயசக்திகள் எனக்கு எதிராகச் செய்த சதியே இது என்று கடும் மறுப்பு வெளியிட்டுள்ளார். கோயிலுக்கு வரும் பாஜக கட்சியிலிருக்கும் பிற பெண்களும் நரசிங்கானந்த் உண்மையைத்தான் பேசுவார் என்று கூறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஆனால் பாஜகவில் இருக்கும் பெண் அரசியல்வாதிகளை கண்ணியக்குறைவாக இவர் பேசியதாக எழுந்த சர்ச்சையில் இவரை முன்பு தீவிரமாக ஆதரித்தவர்களே தற்போது தீவிரமாக எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையடுத்து கோயில் வளாகத்தில் நரசிங்கானந்த் உதவியாளர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உ.பி. போலீஸும் இவருக்கு பலத்த பாதுகாப்பு அளித்துள்ளது. இந்த சாமியார் நரசிங்கானந்த் சரஸ்வதி மீது 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
    Published by:Muthukumar
    First published: