உத்திர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான
பாஜக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது ரவுடிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அவர்களாகவே போலீசிஸ் சரண்டர் அடைந்து வருகின்றனர்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டது. இதில் உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் மீண்டும் 5 ஆண்டு காலத்திற்கு பதவி வகிக்கவுள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் முதன்முறையாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றபோதே குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை அவர் எடுத்தார்.
யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியேற்றதில் இருந்து முதல் பத்து மாதங்களில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் 921 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடந்தன. இதில் 33 பேர் கொல்லப்பட்டனர். யோகி உ.பி. மாநில முதல்வராகப் பதவியேற்ற 12ஆவது நாளில் சஹரன்பூர் என்ற இடத்தில் முதல் என்கவுண்டர் சம்பவம் நடந்தது. அதனை தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவர்களை குறிவைத்து தொடர்ச்சியாக என்கவுண்டர்கள் நடைபெற்றன.
தற்போது இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைந்துள்ள நிலையில், ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர். உ.பி.யைச் சேர்ந்த பிரபல ரவுடியான கவுதம் சிங் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சீல் பிரகாஷ் என்னும் வியாபாரியை கவுதம் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கடத்தி வைத்து ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டம் உலகிற்கே வழிகாட்டுகிறது.. தமிழிசை சௌந்தரராஜன்
இது தொடர்பாக கவுதம் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்த ல ரவுடி கவுதம் சிங் தனது சகோதரருடன் என்னை சுட்டுவிடாதீர்கள் என்ற பதாகையுடன் சாபிய ( Chhapia )காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதேபோல் குற்ற வழக்கில் தொடர்புடைய பலரும் எங்களை சுட்டு விடாதீர்கள் என்ற பதாகையுடன் சரண் அடைய தொடங்கியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.