ஈவ்-டீசிங் - 'சிங்கம்' பட வீடியோவை வெளியிட்டு வார்னிங் கொடுத்த காவல்துறையினர்..

Singam

முதல் கிளிப்புக்கு கீழே இவர்கள் துன்புறுத்துபவர்கள், இரண்டாவது கிளிப்பில் இது நாங்கள், மூன்றாவது கிளிப்பில் இப்போது அவர்கள் போலீசாருடன் பார்ட்டிக்கு செல்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த வீடியோ பதிவுக்கு "பார்ட்டி வித் போலீஸ்?" என்று கேப்சன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சமீபத்தில் உத்தரபிரதேச காவல்துறை வெளியிட்ட மீம் ஒன்று இணையதளத்தில் அதிகளவில் வைரலாகி உள்ளது. காவல்துறையினருடன் பார்ட்டி  செய்ய நினைத்தால் என்ன நடக்கும் என்பதை காட்ட ஒரு நகைச்சுவையான வீடியோவை உத்தரபிரதேச காவல்துறை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் கடந்த 2011-ம் ஆண்டு ஹிந்தியில் அஜய் தேவ்கன் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தின் கிளிப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. உ.பி. காவல்துறை துன்புறுத்துபவர்களுக்கும் ஈவ்-டீஸிங் செய்பவர்களுக்கும் எதிராக ஒரு செய்தியை அனுப்பியது.

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த படம் தான் சிங்கம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஹரி இதுவரை மூன்று பாகங்களை வெளியிட்டுள்ளார். குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக ஆக்ஷ்ன் எடுக்கும் சிறந்த காவல்துறை அதிகாரியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் இதன் வெற்றியை தொடர்ந்து இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் ஹிந்தியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த வீடியோ கிளிப்புகளை வைத்து உத்தரபிரதேச காவல்துறை வெளியிட்ட வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காவல்துறை வெளியிட்டுள்ள முதல் கிளிப்பில் கதாநாயகி குண்டர்களால் துன்புறுத்தப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இரண்டாவது கிளிப்பில், இந்த சம்பவத்திற்குப் பிறகு கதாநாயகியையும் ஹீரோவான சிங்கம் அஜய்யும் ஒன்றாக ஒரு பைக்கில் வருவதை காணலாம். மூன்றாவது கிளிப்பில், அனைத்து குண்டர்களும் போலீசாரால் பிடிபடும் கிளிப்பை காணலாம். அந்த வீடியோவில், ஒவ்வொரு கிளிப்புக்கும் கீழ் சில பதிவுகளையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதில் முதல் கிளிப்புக்கு கீழே இவர்கள் துன்புறுத்துபவர்கள், இரண்டாவது கிளிப்பில் இது நாங்கள், மூன்றாவது கிளிப்பில் இப்போது அவர்கள் போலீசாருடன் பார்ட்டிக்கு செல்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த வீடியோ பதிவுக்கு "பார்ட்டி வித் போலீஸ்?" என்று கேப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் காவல்துறையின் இந்த புதிய முயற்சிக்கு பல நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பலர் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உத்தரபிரதேச காவல்துறை இதுபோன்ற பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட, இரவில் பார்ட்டி நடத்தி அக்கம்பக்கத்தினரை தொந்தரவு செய்பவர்களை குறித்து புகார் கொடுக்க 112 ஹெல்ப்லைன் நம்பரை அறிமுகப்படுத்தியது.
Published by:Ram Sankar
First published: