ஹோம் /நியூஸ் /இந்தியா /

'பேய் பிடிச்சுருக்கு.. வீட்டுக்கு வரணும்' - பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி கைது

'பேய் பிடிச்சுருக்கு.. வீட்டுக்கு வரணும்' - பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி கைது

க்ரைம்

க்ரைம்

உத்தரப் பிரதேசத்தில் போலி மந்திரவாதி பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாந்தீரக வேலைகள், நரபலி, பேய் ஓட்டுதல் போன்ற போலி மந்திரவாதிகளின் குற்றச் சம்பவங்கள் சமீப காலமாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அப்படித்தான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு போலி மந்திரவாதி பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட சொந்த பிரச்சனை காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த வக்கீல் ராஜா ஷேக் என்ற மந்திரவாதியை அணுகியுள்ளார். அவர் பெண்ணுக்கு துஷ்ட சக்தி பிடித்துள்ளதாகவும், தான் அந்த பேய்களை ஓட்டி குணப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

அவ்வாறு கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அன்று அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார் ராஜா ஷேக். தனது வீட்டில் ராஜா ஷேக் தனியாக இருந்த நிலையில்,தனது வீட்டில் வைத்து அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: கணவனை பிரிந்த இளம் பெண்கள்தான் குறி... திருமண ஆசைக்காட்டி நகைகளை மோசடி செய்த கன்னியாகுமரி இளைஞர்!

தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த பெண் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜா ஷேக்கை அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காவலர்கள் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

பெண்ணின் புகாரின் பேரில் ராஜா ஷேக் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் யஷ்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Crime News, Rape case, Superstition, Uttar pradesh