Home /News /national /

உத்தர பிரதேசத்தில் பாஜகவை விட்டு விலகும் கட்சியினர்...!

உத்தர பிரதேசத்தில் பாஜகவை விட்டு விலகும் கட்சியினர்...!

Yogi adityanath

Yogi adityanath

தாழ்த்தப்பட்ட மக்களின் தேவைகளை யோகி ஆதித்யநாத் அரசு பூர்த்தி செய்யவில்லை என்பது பதவி விலகுபவர்களின் முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக உள்ளது. 

  • News18
  • Last Updated :
    உத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறி வருவதால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 125 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

    403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 14- ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அங்கு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் பாஜக-வை விட்டு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் விலகி வருகின்றனர்.  வியாழக்கிழமை உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாக அமைச்சர் தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் எம்எல்ஏக்கள் முகேஷ் வர்மா மற்றும் வினய் ஷாக்யா ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளளனர்.

    கடந்த இரண்டு நாள்களில் பதவி விலகும் மூன்றாவது அமைச்சர் தரம் சிங் சைனி ஆவார். இது வரை 3 அமைச்சர்கள் மற்றும் 5 எம்எல்ஏக்கள் பாஜகவை விட்டு வெளியேறியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின் தேவைகளை யோகி ஆதித்யநாத் அரசு பூர்த்தி செய்யவில்லை என்பது பதவி விலகுபவர்களின் முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக உள்ளது.

    கடந்த செவ்வாய் கிழமை பதவி விலகிய சாமி பிரசாத் மவுரியாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக பதவி விலகிய எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதித்யநாத்தை விட்டு விலகி வர தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பிற்படுத்தப்பட்ட மக்களின் முகமாக கருதப்படும் மவுரியா, ஏற்கெனவே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    பதவி விலகல்கள் ஒரு புறம் இருந்தாலும், 172 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து விட்டதாக பாஜகவின் மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது. தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Also read... வேகமெடுக்கும் ஒமைக்ரான்: எச்சரிக்கையாக இருங்கள்.. பீதி அடையத் தேவையில்லை: பிரதமர் மோடி

    இதனிடையே 125 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தர பிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

    125 பேரில் 50 பேர் பெண்களாவர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கும் தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி வாய்ப்பு அளித்துள்ளார். அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: UP, Yogi adityanath

    அடுத்த செய்தி