Home /News /national /

கடவுள் ஆசீர்வதித்தால் நாட்டில் உள்ள மதரஸாக்களை மூடுவேன் - உ.பி அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

கடவுள் ஆசீர்வதித்தால் நாட்டில் உள்ள மதரஸாக்களை மூடுவேன் - உ.பி அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

உ.பி.அமைச்சர் ரகுராஜ் சிங்- கோப்புப் படம்

உ.பி.அமைச்சர் ரகுராஜ் சிங்- கோப்புப் படம்

என்னை கடவுள் ஆசீர்வதித்தால் நான் நாட்டின் அனைத்து மதரஸாக்களையும் மூடிவிடுவேன் என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் பரபரப்பாக பேசியது சர்ச்சையாகியுள்ளது.

    பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரங்களை இப்போதே ஆரம்பித்து விட்டன. இதில் மதவாதப் பிரச்சாரம் அதிகம் தலை தூக்குவதாக அங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

    மீண்டும் பாஜக ஆட்சியை அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அலிகார் நகருக்கு அமைச்சர் ரகுராஜ் சிங் வருகை தந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “கடவுள் ஆசீர்வதித்தால் நான் நாட்டின் அனைத்து மதரஸாக்களையும் மூடிவிடுவேன். ஏனெனில், மதரஸாக்கள் ஒரு தீவிரவாதிகள் கூடாரமாக உள்ளது. இவற்றில் தீவிரவாதப் பயிற்சிகளும் அளிக்கப்படுவதால் அதில் படிப்பவர்கள் தீவிரவாதிகளாகி விடுகின்றனர்” என்றார்.

    மேலும் அவர் கூறுகையில் உத்தரப் பிரதேசத்தில் 250 ஆக இருந்த மதரஸாக்கள் 22,000 ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இவரது இந்தக் கருத்துக்கு உத்தரப் பிரதேசத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுரேந்திரா சிங் ராஜ்புத் உ.பி. அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்தை மறுக்கையில், “எந்த மதரஸாவில் படித்த நாதுராம் கோட்சே நம் தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார் என்பதையும் அமைச்சர் சொல்ல வேண்டும்.” என்று விமர்சித்துள்ளார்.

    ஆனால் உ.பி. அமைச்சரின் பேச்சு தேர்தல் காலத்தின் மதவாதப் பிரச்சாரத்தின் தொடக்கமாக இதனை எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் பார்க்கின்றனர்.

    இதற்கிடையே ஏபீபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் 75.8% மக்கள் உ.பி.யில் நடைபெற்று வரும் யோகி ஆதித்யநாத் தலைமை பாஜக ஆட்சி மீது கோபமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    Also Read: திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் எதிர்கட்சிகளை துவம்சம் செய்தது பாஜக - அனைத்து மாநகராட்சிகளிலும் வெற்றி
     12,894 பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 75.8% பேர் ஆட்சியின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். 24.2% மக்கள் ஆட்சியை மாற்ற விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: BJP, Uttar pradesh, Yogi adityanath

    அடுத்த செய்தி