ஹோம் /நியூஸ் /இந்தியா /

கள்ளக்காதலியுடன் சேர்ந்து சதித்திட்டம்... கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடி மனைவியை கொன்ற கணவர்!

கள்ளக்காதலியுடன் சேர்ந்து சதித்திட்டம்... கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடி மனைவியை கொன்ற கணவர்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடி மனைவியை கொன்று நாடகமாடிய நபரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள மோடிநகர் பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவரின் மனைவி சோனியா. இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில், சமீப காலமாக விகாஸ் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். இது தொடர்பாக விகாஸ் மற்றும் சோனியா இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதன் விளைவாக, தனது மனைவியை கொலை செய்து விடாலம் என்று விகாஸ் சதித் திட்டம் தீட்டினார்.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று விகாஸ், ஹபூர் பகுதி நெடுஞ்சாலையில் மனைவியுடன் சென்றுள்ளார். அங்கு தனது காதலியை விகாஸ் வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்த மனைவி சோனியாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர், காவல்துறைக்கு தகவல் கொடுத்த விகாஸ் வழிபறி கொள்ளையர்கள் மனைவியை கொன்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார். இருப்பினும் விகாஸ் பேச்சு காவல்துறைக்கு சந்தேகத்தை கிளப்பிய நிலையில், அவரது செல்போனை வாங்கி பார்த்தபோதுதான் உண்மை அம்பலமானது.

விகாஸ் தனது போனில் கூகுள் மூலம் கொலை செய்வது எப்படி என்று தேடியுள்ளார். அத்துடன் பிளிப்கார்ட்டில் விஷம் வங்க முடியமா, துப்பாக்கி வாங்க முடியுமா என்று தேடிப் பார்த்துள்ளார். போலீசாருக்கு துப்பு கிடைத்த நிலையில், விகாஸை பிடித்து விசாரித்ததில் உண்மை ஒப்புக்கொண்டுள்ளார். விகாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவரது காதலியை வலை வீசி தேடி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Extramarital affair, Google, Husband Wife, Murder, Uttar pradesh