Home /News /national /

கமல் பட பாணியில் பழி வாங்கும் பெண் பாம்பு?.. 7 மாதத்தில் 7 முறை பாம்பிடம் கடிபட்ட நபர் சொல்லும் அதிர்ச்சி தகவல்..

கமல் பட பாணியில் பழி வாங்கும் பெண் பாம்பு?.. 7 மாதத்தில் 7 முறை பாம்பிடம் கடிபட்ட நபர் சொல்லும் அதிர்ச்சி தகவல்..

UP snake

UP snake

Snake: தற்காப்புக்காக பாம்பை கொன்ற நபர் ஒருவர் ஏழு முறை பாம்பு கடிக்கு ஆளாகியுள்ளது அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் ஒரு நபர் கடந்த ஏழு மாதத்தில் ஏழு முறை பாம்பிடம் கடிபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர் ஒரு பாம்பை கொன்றதை அடுத்து பழிவாங்கும் நோக்கில் இது நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர் பப்லு. இவர் ஒரு விவசாயத் தொழிலாளி. இவர் ஏழு மாதத்திற்கு முன்னர் தனது வயலில் வேலை செய்த போது ஒரு பாம்பு ஜோடி தாக்கியுள்ளது. தன்னை பாதுகாத்துக்கொள்ள ஒரு பாம்பை இவர் அடித்து கொன்றுள்ளார். இன்னொரு பாம்பு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின், பப்லுவை கடந்த ஏழு மாதங்களாக பாம்பு தொடர்ந்து கடித்துவருவதாகவும், நல்ல வேளையாக அவர் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த சம்பவத்திற்கு பிறகு நான் தனியாக வேலை பார்க்கும் போது எல்லாம், காலில் ஏதோ கடிப்பது போல இருக்கும். என்னவென்று பார்த்தால், காலில் பாம்பு கடித்தற்கான தடம் இருக்கும். சில தடவை பாம்பு என்னை கடித்துவிட்டு ஓடும் போது பார்த்துள்ளேன்.

    அது ஒரே பாம்புதான் எனத் தோன்றும். நல்ல வேளையாக இதுவரை நான் உயிரோடு இருக்கிறேன். ஒரு வேளை நான் சாக வேண்டும் என விதி இருந்தால் அது நடக்கட்டும். நான் தற்காப்புக்காத் தான் பாம்பை கொன்றேன். எனவே, அதற்காக நான் வருத்தப்படவில்லை என்றார்.

    இது குறித்து உள்ளூர் பாம்பு பிடிக்கும் நபர் ரமாய் என்பவர் கூறியதாதவது, தப்பித்த பாம்பு பழிவாங்கும் குணத்துடன் இது போன்று செயல்பட வாய்ப்பு அதிகம். அதே நேரம் அது வயதான பாம்பு போல தெரிவதால், அதற்கு விஷம் இல்லாமல் போயிருக்கும். இருப்பினும் தனது ஜோடியை கொன்றதற்கு அது பழிவாங்க துடிக்கிறது என நினைக்கிறேன் என்றார்.

    இதையும் படிங்க: அடுத்த 3 நாட்களுக்கு இங்கெல்லாம் வெப்பம் கடுமையாக அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாம்பை சாந்தி செய்ய சில சடங்குகள் மற்றும் பூஜைகளை பப்லு செய்ய வேண்டும் என கிராமவாசிகள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.கமல் நடிப்பில் வெளியான நீயா படத்தில் ஆண் பாம்பை கொன்ற நபர்களை பெண் பாம்பு பழிவாங்கி கொலை செய்யும் என்பது போல, நிஜத்தில் ஒரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Revenge, Snake

    அடுத்த செய்தி