ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண்ணை அறையில் அடைத்து கொடூரமாக தாக்கிய காவலர்.. பதறவைக்கும் வீடியோ வைரல்

பெண்ணை அறையில் அடைத்து கொடூரமாக தாக்கிய காவலர்.. பதறவைக்கும் வீடியோ வைரல்

பெண்ணை கொடூரமாக தாக்கிய காவலர்

பெண்ணை கொடூரமாக தாக்கிய காவலர்

யோகி அரசின் காவல்துறை மக்கள் மத்தியில் செய்யும் அராஜகம் நாள்தோறும் வாடிக்கையாகி விட்டது என சமாஜ்வாதி கட்சி குற்றஞ்சாாட்டியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

காவலர் ஒருவர் பெண்ணை அறைக்குள் வைத்து பூட்டி கடுமையாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு கான்பூர் மாவட்டத்தில் உள்ள கக்வான் பகுதியைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவர் பெண் ஒருவரை அறைக்குள் பூட்டி கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்.

அந்த பெண் காவலரிடம் தன்னை விட்டுவிடும் படி கெஞ்சும் நிலையில், அந்த காவலர் விடாமல் மோசமாக தாக்கி தொடர்ந்து அடிக்கிறார். பெண்ணின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் ஜன்னல் வழியாக கத்தி கதறி கெஞ்சியுள்ளனர். அந்த பெண் என்ன தவறு செய்தார், ஏன் இப்படி அடிக்கின்றீர்கள் என்று அவர்கள் கூச்சலிட்டனர்.

அப்போதும் கூட மனம் இரங்காமல் அந்த போலீஸ் அடித்த நிலையில், பெண்ணை அடியில் இருந்து தப்பி விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறார்.  ஆனால் பெண்ணை விடாமல் அடிக்கும் அந்த காவலர், "உங்களை போன்ற ஆட்கள் காவல்துறையிடம் சரியாக நடப்பதில்லை, நீங்கள் எப்போதும் தவறுதான் செய்கிறீர்கள்" என்று செயலை நியாயப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: விளையாட்டு விபரீதமானது... பாராகிளைடிங் சாகச விபத்தில் தென்கொரிய பயணி மரணம்

இந்த அதிர்ச்சி காணொலியை அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் காவல்துறை அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சமாஜ்வாதி கட்சி தனது ட்விட்டர் பதிவில்,"கான்பூர் காவல்துறையின் இந்த செயல் வெட்கக்கேடானது. யோகி அரசின் காவல்துறை மக்கள் மத்தியில் செய்யும் அராஜகம் நாள்தோறும் வாடிக்கையாகி விட்டது. ஆனால், முதலமைச்சரோ இதற்கு மௌனம் சாதிக்கிறார். இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Atrocities of Police, Police, Samajwadi party, UP police, Uttar pradesh, Viral Video