Home /News /national /

உ.பி, ஜம்மு, இமாச்சலில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

உ.பி, ஜம்மு, இமாச்சலில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பட்னிடோப், பட்டோட், சனாசர் உள்ளிட்ட உயரமான பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலாத் தலங்களில் திரும்பிய திசையெல்லாம் பனிக்கட்டிகள் சூழ்ந்து காணப்பட்டன.

    வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே பனிப்பொழிவு நிலவிவருகிறது.

    இந்நிலையில், இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லா நகரில் மீண்டும் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால், நகரின் பெரும்பாலான பகுதிகளை வெண்போர்வை போர்த்தியது போன்று பனிக்கட்டிகள் சூழ்ந்து காணப்பட்டன. பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    Also read... 5 மாநில தேர்தல்: பேரணி, பிரசாரத்திற்கான தடை ஜனவரி 31வரை நீட்டிப்பு

    நகர் முழுவதும் கடும் குளிரால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். விறகுகளை எரித்து மக்கள் இதமான சூழலை ஏற்படுத்திக் கொண்டனர்.

    ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் கடும் பனியால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர்.

    பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள போனியார் பகுதியில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத் துறைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர். 15 முதல் 18 வயது வரையான சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், தகுதிவாய்ந்த மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பட்னிடோப், பட்டோட், சனாசர் உள்ளிட்ட உயரமான பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

    கத்ரா பகுதியில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்தையும் பனிக்கட்டிகள் சூழ்ந்து காணப்பட்டது. பனிப்பொழிவுக்கு மத்தியில் பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து வழிபாடு நடத்தினர்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கடும் குளிரால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

    இதேபோல, உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக, காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

    மேலும் படிக்க: கொரோனா பாதித்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும்? மத்திய அரசு அறிவுரை!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Jammu and Kashmir, Uttar pradesh

    அடுத்த செய்தி