Home /News /national /

புதிய இந்தியாவை உருவாக்குவதில் உ.பி. உச்சத்தில் இருக்கிறது- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

புதிய இந்தியாவை உருவாக்குவதில் உ.பி. உச்சத்தில் இருக்கிறது- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

உத்தர பிரதேசத்தின் 73-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் மோடி புதிய இந்தியாவை உருவாக்குவதில் உத்தரப் பிரதேச மாநிலம் உச்சத்தில் இருக்கிறது என்று பெருமிதமாகக் கூறினார்.

    உத்தர பிரதேசத்தின் 73-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் மோடி புதிய இந்தியாவை உருவாக்குவதில் உத்தரப் பிரதேச மாநிலம் உச்சத்தில் இருக்கிறது என்று பெருமிதமாகக் கூறினார்.

    கடந்த 5 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சிக்கான அளவுகோலை அமைத்துள்ளது என்றும், மாநிலத்தின் பல பரிமாண வளர்ச்சியானது ‘புதிய இந்தியாவில்’ தொடர்ந்து முன்னணி வகிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

    உ.பி. குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, “பாதுகாப்பான, வளமான மாநிலமாக உத்தர பிரதேசத்தை உருவாக்க பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த லட்சிய பயணத்தில் மாநில மக்கள் அனைவரும் இணைய வேண்டும். கடந்த 2017-ம் ஆண்டில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு புதிய பாதையில் மாநிலம் பயணத்தை தொடங்கியது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மாநிலம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன"

    இதனையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீடியோ உரையை பிரதமர் நரேந்திர மோடி மோடி தன் சமூக ஊடகப் பக்கமான ட்விட்டரில் பகிர்ந்தார். அதில் பிரதமரும் தன் பங்குக்கு உத்தரப் பிரதேசத்தைப் புகழ்ந்து பேசியதாவது:

    கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கான அளவுகோலை அமைத்துள்ளது. இதன் காரணமாக, மாநில மக்களின் வாழ்க்கை எளிதாகும் அதே வேளையில், புதிய வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் பல பரிமாண வளர்ச்சி புதிய இந்தியாவில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

    Also Read: எத்தனை வெற்றிகள் பெற்றாலும் இந்தியாவை வெல்வது போல் வருமா - ஷாஹீன் அப்ரீடி

    403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது மற்றும் மார்ச் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
    Published by:Muthukumar
    First published:

    அடுத்த செய்தி