ஹோம் /நியூஸ் /இந்தியா /

வரதட்சணை காரை உற்சாகத்தில் ஓட்டிப்பார்த்த புது மாப்பிள்ளை... பிரேக் என ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபரீதம்

வரதட்சணை காரை உற்சாகத்தில் ஓட்டிப்பார்த்த புது மாப்பிள்ளை... பிரேக் என ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபரீதம்

வரதட்சனையாக வந்த காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மாப்பிள்ளை

வரதட்சனையாக வந்த காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மாப்பிள்ளை

தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதை பெண் வீட்டாரிடம் மறைத்த மாப்பிள்ளை அருண், அந்த விழாவிலேயே டெஸ்ட் ட்ரைவுக்காக காரை எடுத்து ஓட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Etawah, India

  திருமணத்திற்கு வரதட்சணையாக வந்த காரை புதுமாப்பிள்ளை ஓட்டத் தெரியாமல் ஓட்டி, உறவினர்கள் மீது ஏற்றி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலம் எதாவா பகுதியில் உள்ள அக்பர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் குமார். ராணுவ வீரரான இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணத்திற்கு முன்னதாக அவர்களுக்கு திலகமிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது புது மாப்பிளைக்கு பெண் வீட்டார் கார் ஒன்றை வரதட்சனையாக பரிசளித்துள்ளனர்.

  மாப்பிள்ளை அருண்குமாருக்கு கார் ஓட்டத் தெரியாது. ஆனால், தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதை பெண் வீட்டாரிடம் மறைத்த அருண், அந்த விழாவிலேயே டெஸ்ட் ட்ரைவுக்காக காரை எடுத்து ஓட்டத் தொடங்கியுள்ளார். கார் கட்டுப்பாட்டுக்கு வராத நிலையில், பிரேக் என நினைத்து வண்டியின் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மீது மோதியுள்ளது. இதில் மாப்பிள்ளையின் அத்தையின் மீது கார் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 10 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.

  இதையும் படிங்க: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் 20 வயது இளைஞர் தற்கொலை

  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து மணமகன் அருண் குமாரை கைது செய்துள்ளது. திருமண குதுகலத்தில் இருந்த வீட்டில் மாப்பிள்ளைக்கு பரிசளித்த காரால் ஏற்பட்ட விபத்து அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Car accident, Dowry, Marriage, Uttar pradesh