• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பசுக்களைப் பாதுகாக்க அடுத்த மாதம் முதல் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை -உத்தரப் பிரதேச அமைச்சர் அறிவிப்பு

பசுக்களைப் பாதுகாக்க அடுத்த மாதம் முதல் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை -உத்தரப் பிரதேச அமைச்சர் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உத்தரப் பிரதேசத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் லக்‌ஷ்மி நாராயண் அறிவித்துள்ளார்.

  • Share this:
    உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தல பா.ஜ.க வெற்றி பெற்றது. அதனையடுத்து, யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க அரசு அங்கு செயல்பட்டுவருகிறது. அவர், ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு அம்மாநிலத்தில் கொண்டுவரப்பட்டத் திட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களைவிட பசுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

    இந்தநிலையில், பசுக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் லக்‌ஷ்மி நாராயண், ‘மோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட பசுக்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவிருக்கிறது.

    இதற்காக 515 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த சேவை 112 அவசரகால சேவையைப் போல் பசுக்களுக்குப் பயன் தரும். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு உதவியாளர்கள் இருப்பார்கள். அழைப்பு வந்த அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் அவர்கள் தேவைப்படும் இடத்தில் இருப்பார்கள். இந்தத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது. இதற்காக லக்னோவில் ஒரு கால் சென்டர் தொடங்கப்படுகிறது" என்று அமைச்சர் லக்‌ஷ்மி நாராயண் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: